

"கந்தசாமி'க்குப் பிறகு சரத்குமாருடன் "ஜக்குபாய்', தனுஷுடன் "குட்டி', ஆர்யாவுடன் "சிக்குபுக்கு', மேலும் இரண்டு புதிய படங்கள் என பிஸியாகவுள்ளார் ஸ்ரேயா. இதற்கிடையில் ஹிந்தியில் முன்னணி நடிகை அந்தஸ்தையும் பெற முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சல்மான்கானுடன் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது குறித்து கேட்டால்...
""சல்மான்கான் என்னுடைய ஃபேவரைட் ஹீரோ. அவருடைய படத்தில் நான் நடிக்க மறுத்தேன் என்பது வதந்திதான். அவருடன் நடிக்க அழைப்பு வந்தபோது தமிழில் தொடர்ச்சியாக பிஸி. அதனால் நடிக்க முடியவில்லை. ஆனால் அதற்கு ஏதேதோ காரணம் சொல்லி ஹிந்திப் படவுலகில் என்னை நுழைய விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள்.
இப்படித்தான் கடந்த மாதம் நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் வதந்திகள் பரவின. இவை எல்லாமே பொய். "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினேன். அதன்பிறகு பல படங்களில் ஒரு பாடலுக்கு நடிக்க அழைப்பு வந்தது. அவற்றை மறுத்தேன்.
அப்படி அழைத்தவர்கள்தான் என்னைப் பற்றி தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கிறேன். "கந்தசாமி'யில் க்ளாமராக நடித்தது குறித்து கேட்கிறார்கள்... வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் பெண் கேரக்டருக்கு அப்படித்தான் நடிக்க முடியும்'' என்கிறார்.
படப்பிடிப்பில் படபடப்பில்லை!
சிம்பு- த்ரிஷா நடிக்கும் "விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்கிறார் கெüதம் மேனன். இதில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். ""தொடர்ந்து ஸ்டார்களை வைத்து மட்டுமே படம் இயக்குகிறீர்களே?'' என்று கேட்டால்...
""புதுமுக நடிகர், ஸ்டார் நடிகர், ஸ்டார் நடிகரின் மகன் என்றெல்லாம் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. பெரிய நடிகர்கள் என்பதற்காக அவர்களை விசேஷமாகவும் பார்ப்பதில்லை. படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டால் நடிகர், நடிகைகளை அந்தந்த கேரக்டர்களாக மட்டும்தான் பார்ப்பேன். கமல்ஹாசனுடன் பணிபுரியும்போதுகூட அப்படித்தான் இருந்தேன். அது என் சுபாவம். அதனால்தான் படப்பிடிப்பில் படபடப்பில்லாமல் என்னால் பணியாற்ற முடிகிறது. என் கதையில் நடிப்பவர்கள் எல்லோரும் எனக்கு ஸ்டார் நடிகர்களே'' என்கிறார்.
மெüன எதிர்ப்பு!
அண்மையில் நடைபெற்ற "யோகி' பட பாடல் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, பார்வையாளர்களோடு பார்வையாளராகக் கலந்துகொண்டார். மேடையேறவில்லை. காரணம், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இங்கிருக்கும் தமிழர்களுக்குப் போராட்ட குணம் வரும் வரையிலும் எந்த மேடையிலும் பேசுவதில்லை என உறுதி பூண்டிருக்கிறார். இதுகுறித்து, விழாவில் சேரன் பேசும்போது...
""திரையுலகில் எங்களுக்கெல்லாம் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பாரதிராஜா, மேடையில் பேசாமல் மெüன விரதம் இருக்கிறார். அதற்குக் காரணம் என்ன? அவருக்குப் பட வாய்ப்புகள் இல்லையா? வருமானம் இல்லையா? என்னதான் கோபம் என அனைவரும் சிந்திக்க வேண்டும். இலங்கையில் முள் வேலிக்குள் அடைபட்டு தமிழர்கள் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்காக நாம் ஒன்றுபட்டு பொங்கி எழ வேண்டும். பாரதிராஜாவின் மெüனத்தைப் பார்த்தாவது நமக்கெல்லாம் ரோஷம் வரவேண்டும். அவருடைய மெüனத்துக்குத் தலைவணங்குகிறேன்'' என்றார். இதையடுத்து, ஏற்கெனவே சிறைப்பட்ட அனுபவம் காரணமாக உஷாரான அமீர், அடுத்து பேச வந்த சீமானிடம் அடக்கி வாசிக்குமாறு கேட்டுக்கொள்ள அவரும் அவ்வாறே செய்தார்.
மலையாள ப்ரியா!
எந்தெந்த மொழியில் வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த மொழியும் அந்தத் திரையுலகமும்தான் சிறந்தது என்பது நடிகைகளின் கண்ணோட்டம். அதற்கு பத்மப்ரியாவும் விதிவிலக்கல்ல. தற்போது மலையாளப் படவுலகில் வாய்ப்பு கிடைத்து வருவதால் அந்த பூமியின் புகழ்பாடி வருகிறார். தான் நடித்த "காணாக்கண்மணி' என்ற மலையாளப் படம் வெளியானதைத் தொடர்ந்து பத்மப்ரியா பேசியது...
""தமிழகத்தில் நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மலையாளத் திரைப்படங்களில்தான் நடிகர், நடிகைகளின் ஈடுபாடு அதிகமாகக் காணப்படும். தமிழ் சினிமாவில் அதை எதிர்பார்க்க முடியாது. அது மட்டுமன்றி மலையாள நடிகர், நடிகைகளை வைத்துப் படம் எடுக்க திறமையான இயக்குநர்கள் தமிழகத்தில் இல்லை. அதனால் தமிழில் மலையாள நடிகர், நடிகைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்'' என்பதுதான்.
ஜெயித்த பிறகே திருமணம்
"கள்வனின் காதலி', "மச்சக்காரன்' படங்களை இயக்கிய தமிழ்வாணன், "கல்லூரி', "வால்மீகி' படங்களில் நடித்த அகிலை வைத்து "நந்தி' என்ற படத்தை இயக்குகிறார். ""சிவன் கோயிலில் அவருக்கு எதிரில் உள்ள நந்தி, கெட்ட எண்ணங்களோடு வருபவர்களின் குணத்தைத் தடுத்து அவர்களின் நல்ல எண்ணங்களை மட்டுமே சிவனுக்குக் கொண்டு சேர்க்கும்.
இதை மையமாக வைத்துத்தான் "நந்தி' படத்தை இயக்குகிறேன். இதை என் முதல் படமாகக் கருதி பணியாற்றி வருகிறேன்'' என்று கூறும் தமிழ்வாணன் "இதை வெற்றிப் படமாக்கி விட்டுத்தான் திருமணம் செய்வேன்' என சபதமேற்றிருக்கிறார். "நந்தி' படத் தொடக்க விழாவில் தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள ஐந்து இலங்கைத் தமிழ் ஜோடிகளுக்கு சீர் வரிசையோடு திருமணம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவின் தன்னம்பிக்கை!
""என்னுடைய அழகுக்குக் காரணம் இயற்கையான உடல் வாகுதான். அழகான உடலமைப்புக்காக நான் எப்போதும் உடற்பயிற்சியோ, உணவுக் கட்டுப்பாடோ மேற்கொண்டதில்லை'' என கூறி வந்த த்ரிஷா அடியோடு மாறிவிட்டார். சமீப காலமாக, தீவிரமாக யோகா பயிற்சி செய்து வருகிறார். யோகா மாஸ்டர் ஒருவர், த்ரிஷாவுக்காக வீட்டுக்கே வந்து யோகா பயிற்சியளித்து வருகிறார்.
இதையடுத்து தான் விரும்பி உண்ட சில சிக்கன் வகையறாக்களையும் ஐஸ் கிரீம், நொறுக்குத் தீனி போன்றவற்றிற்கும் குட் பை சொல்லியிருக்கிறார் த்ரிஷா. தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ச்சியாக இறங்கு முகத்தில் இருக்கும் த்ரிஷாவுக்கு யோகா பயிற்சியும் தியானமும் தன்னம்பிக்கையைத் தந்துள்ளதாம்.
ஜெமினிக்கு ஜே!
விளம்பரப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், இசை ஆல்பங்கள் போன்றவற்றை இயக்கியுள்ள எம்.வெங்கடேசன், "காதல் மன்னன்' என்ற பெயரில் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கி வருகிறார். ஜெமினி கணேசனின் மகளும் மருத்துவருமான டாக்டர் கமலா செல்வராஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
ஜெமினி கணேசனைப் பற்றி படமெடுக்க என்ன காரணம்? என்று கேட்டபோது...
""ஜெமினி கணேசனைக் காதல் மன்னன் என்ற சிறிய வட்டத்துக்குள் வைத்துப் பழகிவிட்டார்கள். ஆனால் அவருக்குள் இருந்த வெவ்வேறு முகங்கள் உலகம் அறியாதவை. திரையுலகில் எதிரிகளே இல்லாத ஒருவர் அவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்கிற மலைகளுக்கிடையே அரசியல், திரையுலகப் பின்புலங்கள் இல்லாமல் நுழைந்து மூன்றாவது மலையாக உயர்ந்தவர்.
அவருடைய படங்களைத் திரையிட வேண்டும் என்பதற்காகவே தென்னாப்பிரிக்காவில் ஒரு ரசிகர் தியேட்டர் கட்டியிருக்கிறார். இன்னொருவர் சிங்கப்பூரில் விளையாட்டு மையக் கட்டடம் கட்டியிருக்கிறார். இப்படி வெளியே வராத ஏராளமான தகவல்களை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறேன். இதை ஆவணப் படம், தொலைக்காட்சிப் படம், திரைப்படம் என எந்த வடிவிலும் திரையிடும் வகையில் ஃபிலிமில் உருவாக்கியிருக்கிறோம்'' என்றார்.
கார்த்திகா நூற்றுக்கு நூறு!
"பாலைவனச்சோலை' ரீமேக் படத்தில் சுஹாசினி வேடத்தில் நடிக்கும் கார்த்திகா, இதையடுத்து "நூற்றுக்கு நூறு' ரீமேக் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஸ்ரீவித்யா நடித்த வேடம். இது குறித்து அவரிடம் பேசினால்...
""ரீமேக் படங்களில் நடிப்பது யதேச்சையாக அமைந்த ஒன்று. ஆனால் என்னைப் பொருத்தவரை அதுதான் வசதியானது என நினைக்கிறேன். ஒரிஜினல் படங்களைப் பார்த்து கதையை நன்கு உள்வாங்கிக்கொள்ளலாம். மேலும் ஒரிஜினலில் நாயகி எப்படி நடித்திருக்கிறார் எனப் பார்த்து அதிலிருந்து நாம் வித்தியாசமாக நடிக்கலாம். அதனால் என் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ரீமேக் படங்கள்தான்'' என்கிறார் கார்த்திகா.
சினிமாவில் அதை எதிர்பார்க்க முடியாது. அது மட்டுமன்றி மலையாள நடிகர், நடிகைகளை வைத்துப் படம் எடுக்க திறமையான இயக்குநர்கள் தமிழகத்தில் இல்லை. அதனால் தமிழில் மலையாள நடிகர், நடிகைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்'' என்பதுதான்.
ஜெயித்த பிறகே திருமணம்
"கள்வனின் காதலி', "மச்சக்காரன்' படங்களை இயக்கிய தமிழ்வாணன், "கல்லூரி', "வால்மீகி' படங்களில் நடித்த அகிலை வைத்து "நந்தி' என்ற படத்தை இயக்குகிறார். ""சிவன் கோயிலில் அவருக்கு எதிரில் உள்ள நந்தி, கெட்ட எண்ணங்களோடு வருபவர்களின் குணத்தைத் தடுத்து அவர்களின் நல்ல எண்ணங்களை மட்டுமே சிவனுக்குக் கொண்டு சேர்க்கும். இதை மையமாக வைத்துத்தான் "நந்தி' படத்தை இயக்குகிறேன். இதை என் முதல் படமாகக் கருதி பணியாற்றி வருகிறேன்'' என்று கூறும் தமிழ்வாணன் "இதை வெற்றிப் படமாக்கி விட்டுத்தான் திருமணம் செய்வேன்' என சபதமேற்றிருக்கிறார். "நந்தி' படத் தொடக்க விழாவில் தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள ஐந்து இலங்கைத் தமிழ் ஜோடிகளுக்கு சீர் வரிசையோடு திருமணம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவின் தன்னம்பிக்கை!
""என்னுடைய அழகுக்குக் காரணம் இயற்கையான உடல் வாகுதான். அழகான உடலமைப்புக்காக நான் எப்போதும் உடற்பயிற்சியோ, உணவுக் கட்டுப்பாடோ மேற்கொண்டதில்லை'' என கூறி வந்த த்ரிஷா அடியோடு மாறிவிட்டார். சமீப காலமாக, தீவிரமாக யோகா பயிற்சி செய்து வருகிறார். யோகா மாஸ்டர் ஒருவர், த்ரிஷாவுக்காக வீட்டுக்கே வந்து யோகா பயிற்சியளித்து வருகிறார். இதையடுத்து தான் விரும்பி உண்ட சில சிக்கன் வகையறாக்களையும் ஐஸ் கிரீம், நொறுக்குத் தீனி போன்றவற்றிற்கும் குட் பை சொல்லியிருக்கிறார் த்ரிஷா. தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ச்சியாக இறங்கு முகத்தில் இருக்கும் த்ரிஷாவுக்கு யோகா பயிற்சியும் தியானமும் தன்னம்பிக்கையைத் தந்துள்ளதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.