நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 27: ரோகிணி நட்சத்திரம் - நாவல் மரம்

ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டு வண்டிச் சக்கர வடிவமாக அமைந்து வான்வெளியில் பிரதானமாக ஒளிரும் நட்சத்திரம் ரோகிணி. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்கள். இருந்தும் பெண்கள் விஷயத்திலும்,
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 27: ரோகிணி நட்சத்திரம் - நாவல் மரம்

ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டு வண்டிச் சக்கர வடிவமாக அமைந்து வான்வெளியில் பிரதானமாக ஒளிரும் நட்சத்திரம் ரோகிணி.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்கள். இருந்தும் பெண்கள் விஷயத்திலும், பணம், பொருள் விஷயத்திலும் பலவீனமாக இருப்பார்கள்.

வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 20 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக பலன் தரும் தினங்களாகும். இந்தக் காலங்களில் ரோகிணி நட்சத்திரத்தின் நன்மை தரும் நல்ல கதிர்வீச்சுகள் பூமியில் படுகிறது. இந்த நட்சத்திரம் ரிஷப ராசி மற்றும் சுக்கிரன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய இயல்புக்கு மாறாகச் செயல்படும்போதும் பல புதிய நோய்களுக்கும், மன இன்னல்களுக்கும் ஆளாகும்போது அதை கிரக தோஷம் என்பார்கள். இதற்கு ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் கெட்ட கதிர்வீச்சுகள்தான் காரணம் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

ரோகிணி நட்சத்திரத்துடன் நெருக்கமாக இருப்பது நாவல் மரம். இதை நாவல் பழ மரம் என்றும் சொல்வார்கள். இந்த மரம் ரோகிணி நட்சத்திரத்தின் நன்மை தரும் நல்ல கதிர்வீச்சுகளை எல்லாம் வாங்கித் தன் உடலில் நிரப்பிக் கொள்கிறது. அதை அரை மணி நேரம் கட்டிப் பிடிப்பவர்களின் உடலுக்கு எளிதில் மாற்றிவிடுகிறது. இதனால் அதைத் தொடுபவர்களுக்கு வலிமையும் உடல் மற்றும் மனப்பிரச்னைகளும் குணம் பெறுகின்றன. ரோகிணி நட்சத்திர தோஷமும், கிரக தோஷமும் நீங்குகிறது.

ரோகிணி நட்சத்திரத்தால் ஏற்படும் நோய்கள்:

உடல் துர்நாற்றம், வயிறு உப்புசம், சிறுநீர்க்குறைவு, கிருமிகளின் தொற்று, சர்க்கரை நோய், வெள்ளைப்பாடு, தொண்டை குரல் வளைப்புண், பல் ஆடுதல், மண்ணீரல் வீக்கம், சளி, இருமல், அதிக அளவிலான மாதவிடாய் போக்கு, ஆஸ்துமா, கரப்பான், தோல்நோய், இரத்த பேதி, அடிக்கடி தாகம் எடுத்தல் போன்றவையாகும்.

மருத்துவப் பயன்கள்

இதன் பட்டை, இலைச்சாற்றை பேதி மற்றும் நாள்பட்ட பேதிக்கு கொடுப்பார்கள். இதன் கஷாயத்தை பல் ஈறுகளைப் பலப்படுத்தவும், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், கொப்பளிக்கவும் தரப்படுகிறது. இதன் இலைச் சாம்பலில் பசை தயாரித்து வெட்டுக் காயம், தீப்புண் காயங்களின் தழும்புகள் நீங்கத் தருவார்கள்.

நாவல் பழக் கொட்டையின் உள்பருப்பு, மாங்கொட்டையின் உள்பருப்பு, பிஞ்சுக் கடுக்காய் மூன்றையும் சம அளவில் இடித்துப் பவுடராக்கி தினசரி 2 வேளை காலை, மாலை மூன்று கிராம் அளவில் மோருடன் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

நாவல் மரப்பட்டையை எரித்தால் வெள்ளை நிறச் சாம்பல் கிடைக்கும். இதை நன்றாகச் சலித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிராம் சாம்பலை தினசரி 2 வேளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

நாவல் மர இலையை உலர வைத்துப் பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி 1 கிராம் வீதம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளி

களுக்கு அதிக அளவில் வெளியேறும் சிறுநீர் கட்டுப்படும்.

10 கிராம் நாவல் மரப்பட்டையைப் பவுடராக்கி ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டிய பிறகு வடிக்கட்டி காலை, மாலை 2 வேளை குடிக்கலாம். அல்லது நாக மரப்பட்டையைப் பவுடராக்கி 2 கிராம் வீதம் காலை, மாலை இரண்டு வேளை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இவ்வளவு சிறப்பு மிக்க நாவல் மரம் ரோகிணி நட்சத்திரம் கொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு அமுதமாகத் திகழ்கிறது. யுனானி மருந்து கம்பெனிகள் நாவல் பழக்கொட்டை மற்றும் நாவல் பழத்தைக் கொண்டு குர்ஸ் டயாபடீஸ் மாத்திரை, சஃபூப் டயாபடிஸ், ஷர்பத் ஜாமுன் மற்றும் நாவல் பழ வினிகர் தயாரித்து கடைகளில் விற்கின்றார்கள். அதையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

பொதுவாக பல இடங்களிலும் நாவல் மரம் வளர்க்கப்படுகிறது. விசேஷமாக வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com