திரைக்கதிர்: நூலாடை அல்ல: நூறாடை!

திரைக்கதிர்: நூலாடை அல்ல: நூறாடை!

பாரதிராஜாவின் உதவியாளர் அன்பு இயக்கத்தில் சந்தோஷ் நடிக்கும் "மிட்டாய்' படத்துக்காக "கடலோரக் கவிதைகள்' படத்தின் "அடி ஆத்தாடி...' பாடல் புதுமையான பாணியில் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இந்த ஒரு பாடலுக்கு மட

பாரதிராஜாவின் உதவியாளர் அன்பு இயக்கத்தில் சந்தோஷ் நடிக்கும் "மிட்டாய்' படத்துக்காக "கடலோரக் கவிதைகள்' படத்தின் "அடி ஆத்தாடி...' பாடல் புதுமையான பாணியில் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இந்த ஒரு பாடலுக்கு மட்டும் ஹீரோ சந்தோஷுக்கு 100 காஸ்ட்யூம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது...

""ஒரு காதல் செய்வீர்', "திருரங்கா' படத்துக்குப் பிறகு "மிட்டாய்' படத்தில் நடிக்கிறேன். வாழ்க்கையில் நட்பும் காதலும் மிட்டாய் போன்று சுவையானது என்ற கருத்தை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. "அடி ஆத்தாடி...' பாடல் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, சாலக்குடி, ஊட்டி, கோத்தகிரி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. 100 காஸ்ட்யூம்கள் என்பதால் ஒவ்வொரு ஆடையையும் மாற்றி மாற்றி நடித்தது சிரமமாக இருந்தாலும் பாடலைப் பார்க்கும்போது அது தெரியவில்லை'' என்று நம்பிக்கையுடன் கூறும் சந்தோஷ், திமுகவின் முதல் எம்.பி.யான இ.ரா.தர்மலிங்கத்தின் பேரன்.

வழித்துணையே வாழ்க்கைத் துணையாய்!

தான் தயாரித்து இயக்கும் "பையா' படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் லிங்குசாமி. படப்பிடிப்பில் பிஸியாக இருந்தவரிடம் "பையா' பற்றி கேட்டபோது...

"" "பைய' என்றால் "மெல்ல' எனப் பொருள்படும். "பையா' என்றால் இளமையானவன், புதியவன் எனப் பொருள் கொள்ளலாம். காதலின் பயணத்தைப் புதுமையான கோணத்தில் சொல்வதுதான் கதை. சாதாரணமாக ஒரு பேருந்தில் பயணம் செய்யும்போது அதில் நமக்குப் பிடித்த மாதிரி ஒரு பெண் இருந்தால் போதும். பயணச் சூழலே மாறி விடும். சாரல் விழுந்தாலும் பெருமழை பெய்தாலும் ஏன் பஸ் பிரேக் டவுன் ஆனாலும்கூட எதுவும் தெரியும். எல்லா அசெüகரியங்களையும் அந்தப் பெண்ணின் இருப்பு பின்னுக்குத் தள்ளி விடும். பயணத்தின்போது சந்தித்த அப்படிப்பட்ட ஒரு பெண் இதயத்துக்குள் இருக்கை போட்டு அமர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பயணம் பற்றியதுதான் "பையா'. படத்தில் நா.முத்துக்குமாரின் பாடல்கள் மிகச் சிறப்பாகப் பேசப்படும். "ரன்', "சண்டக்கோழி' படங்களுக்குப் பிறகு யுவன்ஷங்கர்ராஜாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறேன். இந்தப் படத்துக்காகக் கஷ்டப்பட்டு பணிபுரியவில்லை; இஷ்டப்பட்டு பணிபுரிகிறேன்'' என்றார் லிங்குசாமி.

கனடா டூ தமிழ்நாடு..!

பொதுவாக தமிழ்த் திரையுலகினர் பாடல் கம்போஸிங் மற்றும் ரெக்கார்டிங்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். ஆனால் தமிழகத்தில் பிறந்து கனடாவில் இசையமைப்பாளராக இருக்கும் கபிலேஷ்வர் தான் இசையமைக்கும் "கோப்பு' படத்தின் இசைப் பணிகளுக்காக தமிழகம் வந்திருக்கிறார். கனடா தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பல பிரபல விளம்பரப் படங்களுக்கும் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ள கபிலேஷ்வரிடம் பேசியபோது...

""தமிழகத்துக்கும் இசைத்துறைக்கும் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்பு உள்ளது. இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற பிறகு உலகின் பார்வை தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. தவிர, உலகில் உள்ள உயர்தொழில்நுட்ப வசதிகளுக்கும் தமிழகத்தில் குறைவில்லை. "கோப்பு' ஒரு க்ரைம்-த்ரில்லர் படம். இதற்கு பண்டைக் கால இசைக்கருவிகளைப் பயன்படுத்தி வித்தியாசமான இசையைக் கொடுத்திருக்கிறோம். அதற்கு தமிழகத்தைவிட சிறந்த இடம் உலகில் வேறு எதுவும் இல்லை என்றார்.

சூப்பர் பாரி!

சற்று இடைவெளிக்குப் பிறகு "கச்சேரி ஆரம்பம்' படத்தின் மூலம் மீண்டும் தனது வெற்றிப் பயணத்துக்கு அச்சாரம் இட்டிருக்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ். ஜீவா, பூனம் பாஜ்வா, வடிவேலு நடிக்கும் இந்தப் படத்தின் மூலமும் திரைவாணன் என்ற புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார் ஆர்.பி.செüத்ரி.திரைவாணனிடம் படத்தைப் பற்றி கேட்டபோது...

""படத்தில் ஜீவா கதாபாத்திரத்தின் பெயர் பாரி. பெயருக்கேற்றாற்போல, தன்னிடம் யார் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடும் குணமுடையவன் ஹீரோ. இதனால் குடும்பத்தில் பல பிரச்னைகளைச் சந்தித்தாலும் தன்னுடைய வள்ளல் தன்மையில் உறுதியாக இருக்கிறான். இந்நிலையில் அவனுடைய காதலையே யாசகமாகக் கேட்கிறான் ஒருவன். அப்போது பாரி என்ன முடிவெடுக்கிறான்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதைச் சொல்வதுதான் கதை'' என்றார்.

திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ள கபிலேஷ்வரிடம் பேசியபோது...

""தமிழகத்துக்கும் இசைத்துறைக்கும் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்பு உள்ளது. இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற பிறகு உலகின் பார்வை தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. தவிர, உலகில் உள்ள உயர்தொழில்நுட்ப வசதிகளுக்கும் தமிழகத்தில் குறைவில்லை. "கோப்பு' ஒரு க்ரைம்-த்ரில்லர் படம். இதற்கு பண்டைக் கால இசைக்கருவிகளைப் பயன்படுத்தி வித்தியாசமான இசையைக் கொடுத்திருக்கிறோம். அதற்கு தமிழகத்தைவிட சிறந்த இடம் உலகில் வேறு எதுவும் இல்லை என்றார்.

சூப்பர் பாரி!

சற்று இடைவெளிக்குப் பிறகு "கச்சேரி ஆரம்பம்' படத்தின் மூலம் மீண்டும் தனது வெற்றிப் பயணத்துக்கு அச்சாரம் இட்டிருக்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ். ஜீவா, பூனம் பாஜ்வா, வடிவேலு நடிக்கும் இந்தப் படத்தின் மூலமும் திரைவாணன் என்ற புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார் ஆர்.பி. செüத்ரி. திரைவாணனிடம் படத்தைப் பற்றி கேட்டபோது...

""படத்தில் ஜீவா கதாபாத்திரத்தின் பெயர் பாரி. பெயருக்கேற்றாற்போல, தன்னிடம் யார் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடும் குணமுடையவன் ஹீரோ. இதனால் குடும்பத்தில் பல பிரச்னைகளைச் சந்தித்தாலும் தன்னுடைய வள்ளல் தன்மையில் உறுதியாக இருக்கிறான். இந்நிலையில் அவனுடைய காதலையே யாசகமாகக் கேட்கிறான் ஒருவன். அப்போது பாரி என்ன முடிவெடுக்கிறான்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதைச் சொல்வதுதான் கதை'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com