விருது பெறும் கனவு!

தனது படங்களுக்குத் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதில் உற்சாகமாகியுள்ள தமன்னா சம்பளத்தை அரை கோடிக்கு உயர்த்தியுள்ளதாகக் கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டால்... ""ஆண்களிடம் சம்பளத்தையும்
விருது பெறும் கனவு!

தனது படங்களுக்குத் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதில் உற்சாகமாகியுள்ள தமன்னா சம்பளத்தை அரை கோடிக்கு உயர்த்தியுள்ளதாகக் கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டால்...

""ஆண்களிடம் சம்பளத்தையும் பெண்களிடம் வயதையும் கேட்கக் கூடாது என சொல்லுவார்கள்; அதில் எனக்கு நம்பிக்கையில்லை; என் வயது 19. சம்பளம் பற்றி சொல்லமாட்டேன். என்னுடைய தற்போதைய மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற தொகையைத்தான் சம்பளமாகப் பெறுகிறேன். விருது கிடைக்கக் கூடிய வகையில் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் என்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொள்வேன். சிறிய விருது முதல் தேசிய விருது வரை எல்லா விருதுகளையும் பெற வேண்டும் என்ற கனவு உள்ளது. அதற்கான காலமும் உள்ளது'' என்கிறார் தமன்னா.

ஒரே படத்தில் 100 பட அனுபவம்!

"சக்கரகட்டி' படத்தில் அறிமுகமான சாந்தனு அடுத்து தனது தந்தை கே.பாக்யராஜின் இயக்கத்தில் நடித்த "புதிய வார்ப்புகள்' படத்தின் டைட்டில் "சித்து -பிளஸ் 2' என மாற்றப்பட்டுள்ளது. திரைக்கதை வித்தகரான தந்தையின் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது...

""தந்தையின் இயக்கத்தில் ஏற்கெனவே "வேட்டிய மடிச்சு கட்டு' படத்தில் நடித்துள்ளேன். தற்போதுதான் முழு கதாநாயகனாக "சித்து' படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் ஹீரோவாக மட்டுமல்லாமல் உதவி இயக்குநராகவும் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளேன்.

அப்பாவின் இயக்கத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்த ஒரு படத்தில் நடித்ததின் மூலம் எனக்கு 100 படங்களில் நடித்த அனுபவம் கிடைத்துள்ளது. மற்றவர்கள் இயக்கத்தில் நான் நடிக்கும்போது சில கருத்துகளைச் சொல்வாரே தவிர படத்தில் தலையிட மாட்டார். ஏனென்றால் மற்ற இயக்குநர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதை ஓர் இயக்குநராக என் அப்பா எப்போதும் விரும்பமாட்டார்'' என்றார் சாந்தனு.

பெரிய சஸ்பென்ஸ்!

பேரரசு இயக்கத்தில் பரத், சுனேனா நடிக்கும் "திருத்தணி' சாமியார்கள் பற்றிய கதை என வரும் தகவல்கள் பற்றி பேரரசுவிடம் கேட்டபோது...

""எனது முந்தைய படமான "திருவண்ணாமலை'யை சாமியாரை மையப்படுத்தி எடுத்திருந்தேன். அதனால் "திருத்தணி'யில் சமுதாயத்துக்குத் தேவையான வேறு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறேன். ஒரு போராட்டத்தில் வெற்றி பெற உடல் பலத்தை விட மன பலமே முக்கியம் என்பதுதான் கதைக் கரு. பரத் ஜிம் மாஸ்டராக நடித்திருக்கிறார். ராஜ்கிரண் அவரை வழிநடத்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுனேனாவின் கதாபாத்திரத்தில் ஒரு பெரிய சஸ்பென்ஸ் வைத்திருக்கிறேன். படம் 2010-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது'' என்றார்.

தாதாக்கள் பிடியில் ஸ்டார் நடிகர்கள்!

தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து காட்சிகளை அப்பட்டமாக உருவி குறிப்பாக, "அண்ணாமலை' படத்தின் ரீமேக் ஆக உருவாக்கிய "ஆறுமுகம்' படம் தோல்வியடைந்தாலும் அதுபற்றி கவலைப்படாமல் அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா. அடுத்த ப்ராஜெக்ட் குறித்து கேட்டால்...

""இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் பரபரப்பையும் விறுவிறுப்பையும்தான் அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கி வருகிறேன். இந்திய சினிமாவின் பெரும்பாலான முக்கிய ஸ்டார் நடிகர்களும் பிரபலங்களும் தாதாக்கள் பிடியில்தான் உள்ளனர். இதை மையமாக வைத்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளேன். அதை எந்த மொழியில் இயக்குவது என்பதைத்தான் யோசித்து வருகிறேன்'' என்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

புதிய பதவி...புதிய கார்!

தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தபோது கூட ரம்பா இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்கியதில்லை. ஆனால் வாய்ப்புகள் ஏதும் இல்லாத இப்போதைய சூழ்நிலையில் கோடி ரூபாய் மதிப்புள்ள கார் வாங்கியிருக்கிறார் என்பதுதான் சினிமாவில் தற்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு. இதுகுறித்து கேட்டபோது...

""கனடாவில் உள்ள ஒரு பிரபல விளம்பர நிறுவனம் தங்களுடைய வீட்டு உபயோகத் தயாரிப்புப் பொருள்களைச் சந்தைப்படுத்த ரம்பாவை விளம்பரத் தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்காக லேட்டஸ்ட் "பி.எம்.டபுள்யூ.7.5' மாடல் காரைப் பரிசாக அளித்துள்ளது. அந்தக் காரின் விலை ஒரு கோடி அல்ல; ஒன்றரை கோடி'' என்றது ரம்பா வட்டாரம்.

ரகுவரன்தான் ரோல் மாடல்!

டாக்டராக இருந்து நடிகராக மாறிய, அதிலும் விருப்பப்பட்டு வில்லன் நடிகரானவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் சென்னை ஆனந்தி மருத்துவமனை சேர்மனும் டாக்டருமான சீனிவாசன். நடிக்க வந்ததது குறித்து கேட்டால்...

""எனக்கு சினிமா மீது தீராத ஆர்வம் உண்டு என்றாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. அதற்கு முயற்சியும் செய்யவில்லை. என்னிடம் சிகிச்சைக்காக வந்த தயாரிப்பாளர் பானு, என்னுடைய நடை, உடை, பாவனையைப் பார்த்துவிட்டு அவருடைய "உனக்காக ஒரு கவிதை' படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் மறுத்தாலும் அவருடைய தொடர்ச்சியான வற்புறுத்தலால் சில கண்டிஷன்களோடு சம்மதித்தேன்.

அந்தப் படம் வெளிவருவதற்குள் நான் நடிப்பது பற்றி கேள்விப்பட்ட என்னுடைய சினிமா நண்பர்கள் தங்களுடைய படத்திலும் நடிக்க வேண்டும் என வற்புறுத்தினர். என்னுடைய மருத்துவப் பணி பாதிக்காத வகையில் தேதி ஒதுக்கினால் நடிக்கிறேன் என சம்மதித்தேன். தற்போது "நானே வருவேன்', "மண்டபம்', "ஆனந்த தொல்லை', "இந்திர சேனா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். எல்லா படங்களிலும் வில்லன் வேடம்தான். வில்லன் நடிப்பில் ரகுவரன்தான் என்னுடைய ரோல்மாடல்.

அவர் அளவுக்கு நடிக்காவிட்டாலும் ஓரளவு முயற்சி செய்வேன். மக்கள் ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து சினிமா தியேட்டர்களில் பார்க்கலாம். இல்லையென்றால் பேக் டூ ஆபரேஷன் தியேட்டர்தான்'' என்கிறார் டாக்டர் சீனிவாசன்.

புதிய பதவி...புதிய கார்!

தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தபோது கூட ரம்பா இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்கியதில்லை. ஆனால் வாய்ப்புகள் ஏதும் இல்லாத இப்போதைய சூழ்நிலையில் கோடி ரூபாய் மதிப்புள்ள கார் வாங்கியிருக்கிறார் என்பதுதான் சினிமாவில் தற்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு. இதுகுறித்து கேட்டபோது...

""கனடாவில் உள்ள ஒரு பிரபல விளம்பர நிறுவனம் தங்களுடைய வீட்டு உபயோகத் தயாரிப்புப் பொருள்களைச் சந்தைப்படுத்த ரம்பாவை விளம்பரத் தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்காக லேட்டஸ்ட் "பி.எம்.டபுள்யூ.7.5' மாடல் காரைப் பரிசாக அளித்துள்ளது. அந்தக் காரின் விலை ஒரு கோடி அல்ல; ஒன்றரை கோடி'' என்றது ரம்பா வட்டாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com