"இதில் என்ன தவறு?'

செüந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "கோவா' படத்தில் அரவிந்த் ஆகாஷும் சம்பத்தும் ஓரினச் சேர்க்கையாளர்களாக நடித்திருந்தனர். இது, நமதுகலாசாரத்துக்கு எதிரானது என வெளிவரும்
Updated on
1 min read

செüந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "கோவா' படத்தில் அரவிந்த் ஆகாஷும் சம்பத்தும் ஓரினச் சேர்க்கையாளர்களாக நடித்திருந்தனர். இது, நமதுகலாசாரத்துக்கு எதிரானது என வெளிவரும் சர்ச்சைகள் குறித்து அரவிந்திடம் கேட்டபோது...

""நடிப்பை நடிப்பாகப் பார்த்தால் எதிலும் சர்ச்சை இல்லை. கோவாவில் நடைபெறும் கதைப் பகுதியில்தான் இந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது. கோவாவில் "கே(ய்)ஸ்'  எனப்படும் நூற்றுக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர். அதனால்தான் இயக்குநர் அதுபோன்று எங்கள் கதாபாத்திரத்தின் தன்மையைச் சித்திரித்திருந்தார். தவிர, நமது நாட்டிலேயே இதைச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அரவானி, பெண் வேடங்களில் ஏற்கெனவே பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். அதனால்தான் நானும் இந்தக் கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்தேன். வெறும் நடிப்புதானே... இதில் என்ன தவறு?'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com