

சரத்குமார் நடித்த "ஜக்குபாய்' படம், வெளிவருவதற்கு முன்பே இணையதளங்களில் ஒளிபரப்பாகி திருட்டு வி.சி.டி.யாக உலா வந்தது. இதையடுத்து திரையுலகினர் தங்கள் படங்களின் திருட்டு வி.சி.டி.க்களை ஒழிக்கும்பொருட்டு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரஜினியின் மெகா பட்ஜெட் படமான "எந்திரன்' படத்தை 3-டி தொழில்நுட்பத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
2-டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் 3-டி வடிவில் உருவாக்கினால் மக்களை நேரடியாக திரையரங்குகளுக்கு வரவழைக்க முடியும் என நம்புகிறார் இயக்குநர் ஷங்கர். இதற்காக உலகின் முன்னணி கிராஃபிக்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.