நாட்டியமா? நடிப்பா?

"பொம்மலாட்டம்', "ஆனந்த தாண்டவம்' படங்களில் நடித்த ருக்மணிக்கு நல்ல திறமையிருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் குவியவில்லை. வந்தாலும், அவை கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வாய்ப்புகளாகவே அமைகின்றனவாம். இவற்ற
நாட்டியமா? நடிப்பா?
Updated on
1 min read

"பொம்மலாட்டம்', "ஆனந்த தாண்டவம்' படங்களில் நடித்த ருக்மணிக்கு நல்ல திறமையிருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் குவியவில்லை. வந்தாலும், அவை கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வாய்ப்புகளாகவே அமைகின்றனவாம். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு சிலரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் ருக்மணி.

அதற்கு "நீங்கள் தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப இன்னும் எடையை அதிகரித்துக்கொண்டு வாருங்கள்; இல்லாவிட்டால் எங்கள் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுங்கள்' என்றே பதில் வருகிறதாம். எடையை அதிகரித்தால் தான் நேசிக்கும் நாட்டியக் கலையைத் தொடர முடியாது; எடையைக் குறைத்தால் சினிமாவில் நடிக்க முடியாது என்பதால் குழப்பத்தில் இருக்கிறார் ருக்மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com