
வானத்தில் கட்டில் கால் போன்ற வடிவத்தில் நட்சத்திரக் கூட்டம் ஓன்று இருக்கிறது. இதனை உத்திரட்டாதி நட்சத்திரம் என்பார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் சளித் தொல்லை, இருமல், சர்க்கரை நோய், மூலம், தோல் நோய்கள்,வெண் குஷ்டம், புண், சொறி, சிரங்கு, கட்டிகள், மேக நோய், குடல் புழுக்கள், பூச்சிக்கடி, விஷக்கடி, பொடுகுத் தொல்லை, மலட்டுத்தன்மை போன்றவை உருவாகின்றன.
பெரும்பாலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குதிகால்,பாதங்கள்,கால்விரல்கள் அதிக அளவில் பாதிக்கும். அதனால் அவர்கள் மற்றவர்களைச் சொல்லி குதிக்காலையும்,கால் விரல்களையும் அடிக்கடி அழுத்திக் கொண்டே இருக்கச் சொல்வார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரம் வியாழன் கிரகம், மீனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. வியாழக்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கும் இந்த நட்சத்திரம் ஆட்சி செய்கிறது.
இந்தக் காலங்களில் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுகள் பூமியில் அதிக அளவில் படும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் வேப்ப மரத்துடன் நெருக்கம் கொண்டது. இந்த நட்சத்திரம் நல்ல கதிர்வீச்சுகள் மனிதனுக்கு ஆரோக்கியமும், கெட்ட கதிர்வீச்சுகள் நோய்களையும் உண்டாக்குகிறது. வேப்ப மரம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளும்,கெட்ட கதிர்வீச்சுகளும் பூமியை நோக்கி அதிக அளவில் படும்போது,தன் உடலுக்குள் சேமித்து வைத்துக் கொள்கிறது. அதை சுத்தம் செய்து நல்ல கதிர்வீச்சுகளாக மாற்றி மனிதர்களுக்கு நன்மை அளிக்கும் பொருளாகத் தருகிறது.
வேப்ப மரத்தின் இலை,பட்டை,பழங்கள்,பூக்கள்,வேர்,கட்டை அனைத்துமே நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டவை. மனிதர்களுக்கு நன்மை தரும் வகையில் அமைந்து இருக்கிறது. இதைத்தான் நாம் மருத்துவக் குணங்கள் என்று கூறுகின்றோம். அம்மை மற்றும் நச்சுக்கிருமிகளால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த இன்றுங்கூட நாம் வேப்பமர இலைகளின் மீது நோயாளிகளைப் படுக்க வைப்பதைக் காண்கிறோம். இதைத்தான் "ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை என்பார்கள். நோய் இல்லாதவர்கள் வேப்ப மரத்தைத் தினசரி அரை மணி நேரம் கட்டிப் பிடித்தால் உடலுக்குள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது. நோய்கள் இருந்தால் குணம் பெறுகின்றன. இம்மரத்தடியில் ஓய்வு எடுக்கலாம். அல்லது இம்மரப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தினால் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டாகும் நோய்கள் குணம் பெறுகின்றன.
வேப்ப மரத்தின் பயன்கள்:
இலை : வேப்ப மரத்தின் இலைகள் தோல் நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகின்றன. வேப்ப மர இலைகளை அரைத்து பசைபோல் செய்து வீக்கம், நாள்பட்ட புண்கள், கட்டிகள் மீது பூசி வரலாம். தாய்மார்கள் பால் சுரப்பை நிறுத்த வேப்ப மர இலைகளை மார்பகங்களின் மீது வைத்து கட்டுவார்கள்.
வேப்பம் பூ: வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல்,பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.
வேப்பங்காய்: வைரஸ் காய்ச்சலால் தொழுநோய், சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு வேப்பங்காய் நல்ல பலன் தருகின்றது.
வேப்பம் பழம் : வேப்பம் பழத்தை அரைத்து சாற்றை எடுத்து தோல் புண், சொறி, சிரங்குகளில் பூச அவை குணம் பெறும்.
வேப்பங் கொட்டை: உடலில் உள்ள புண்களில் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காதபடி செய்ய வேப்பங்கொட்டையை அரைத்துப் பூசும் வழக்கம் கிராமங்களில் நிலவி வருகின்றது.
பட்டை: வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும் என்று மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டு வருகிறது.
வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வேப்ப மரங்கள் நன்கு வளர்க்கப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்படத்தக்கது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.