

சக்தி சிதம்பரம் இயக்கி வரும் "குரு சிஷ்யன்' படத்தில் சுந்தர்.சி, ஒரு பாடல் பாடியுள்ளார். இரண்டு நண்பர்களுக்குள் ஒரு பிரச்னையில் மோதல் ஏற்படுகிறது. இதனால் பிரியும் அவர்கள் மீண்டும் அதே பிரச்னை மூலம் ஒன்று சேருவதுதான் கதை. தினா இசையில் "சுப்பையா சுப்பையா நீ செய்யிறது தப்புய்யா...' என்ற பாடலைப் பாடியுள்ள சுந்தர்.சி யிடம் சொந்தக் குரலில் பாடிய அனுபவம் குறித்து கேட்டபோது...
""பாடுவது மிகவும் சுலபம் எனவும் ரெக்கார்டிங் தியேட்டருக்குள் செல்லும் பாடகர்கள் அரை மணி நேரத்தில் பாடி முடித்துவிட்டு பணம் வாங்கிச் சென்றுவிடுகிறார்கள் என்றும்தான் நினைத்துக் கொண் டி ருந்தேன். ஆனால் இந்தப் பாடலை பல "டேக்' வாங்கி பாடியபோதுதான் அதில் உள்ள சிரமம் புரிந்தது. இந்தப் பாடல் சிறப்பாக வந்துள்ளது. அதோடு "கடலோரக் கவிதைகள்' படத்தில் இடம்பெற்ற "அடி ஆத்தாடி...' பாடலை தினா வித்தியாசமாக ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடலும் ரசிகர்களைக் கவரும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.