பிரிவும் உறவும்

ஒரு காதல் ஜோடியால் ஒரு கிராமமே இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த கிராமத்தினரை ஒன்றுசேர்க்க முயலும் இளைஞர்களின் முயற்சிக்கு பெரியவர்கள் முட்டுக்கட்டையாக நிற்கிறார்கள். இந்தப் பின்னணியை வைத்து "பாடக சாலை' என
பிரிவும் உறவும்
Updated on
1 min read

ஒரு காதல் ஜோடியால் ஒரு கிராமமே இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த கிராமத்தினரை ஒன்றுசேர்க்க முயலும் இளைஞர்களின் முயற்சிக்கு பெரியவர்கள் முட்டுக்கட்டையாக நிற்கிறார்கள். இந்தப் பின்னணியை வைத்து "பாடக சாலை' என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார் தமிழ்.ஜெ. படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.

""அப்துல் கலாமின் "கனவு காணுங்கள்' என்ற தாரக மந்திரம்தான் படத்தின் கதைக் கரு. இதைக் காதல், சென்டிமெண்ட், காமெடி கலந்து நல்ல மெஸேஜோடு சொல்லியிருக்கிறோம். படத்தில் இடம்பெறும் "கொஞ்சும் குமரி' என்ற பாடல் காட்சியை முழுக்க முழுக்க தண்ணீருக்குள் கிரேன் உதவியுடன் 50 அடி ஆழத்தில் புதுமையாகப் படமாக்கியிருக்கிறேன். இந்தப் பாடல் காட்சி பெரிய அளவில் ரசிகர்களைக் கவரும்.ஹித்தேஷ் இசையில் கோவை முஸ்தபா, தன்னுடைய கணீர்க் குரலில் பாடியுள்ள தெருக்கூத்துப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com