திரைக்கதிர்: வித்தியாசமான ஓமகஷியா

தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவை நையாண்டி செய்து "தமிழ் படம்' என்ற புதிய படம் தயாராகியுள்ளது.. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரித்துள்ள இந்தப் படத்தை சி.எஸ்.
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவை நையாண்டி செய்து "தமிழ் படம்' என்ற புதிய படம் தயாராகியுள்ளது.. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரித்துள்ள இந்தப் படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார்.



"சென்னை 28', "சரோஜா' படங்களில் நடித்த சிவா இதில் தனி கதாநாயகனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகும் இந்தப் படத்தின் ரஷ் பார்த்த சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இப்படிப்பட்ட ஒரு தமிழ் படத்தை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்படி நமக்கு வராமல் போனது? என பொறாமையில் புலம்பித்தள்ளியிருக்கிறார்கள்.



குறிப்பாக, வித்தியாசமான சப்தங்களை வைத்து மட்டுமே உருவாக்கப்பட்ட "ஓமகஷியா...' பாடலை சிலாகிக்காதவர்களே இல்லை. முழு படமும் ரெட் ஒன் டிஜிட்டல் கேமிராவில் படமாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com