திரைக்கதிர்: அதிவேகப் பாடல்!

"திண்டுக்கல் சாரதி' படத்துக்குப் பிறகு கருணாஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் "அம்பாசமுத்திரம் அம்பானி'. கருணாஸ் நடித்த பலபடங்களுக்கு காமெடி டிராக் எழுதிய பி.ராம்நாத் படத்தை இயக்குகிறார். "ராஜாதிராஜா' படத்
திரைக்கதிர்: அதிவேகப் பாடல்!
Updated on
1 min read

"திண்டுக்கல் சாரதி' படத்துக்குப் பிறகு கருணாஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் "அம்பாசமுத்திரம் அம்பானி'. கருணாஸ் நடித்த பலபடங்களுக்கு காமெடி டிராக் எழுதிய பி.ராம்நாத் படத்தை இயக்குகிறார்.

"ராஜாதிராஜா' படத்துக்குப் பிறகு இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார் கருணாஸ். படத்துக்காக அண்மையில் ஒரு பிரமாண்டமான அரங்கில் "ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம் ஒத்தையிலே போறவளே நீ நிப்பியாம்...' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலுக்கு கருணாஸ், ரகசியா ஆகியோருடன் 100 நடனக் கலைஞர்கள் ஆடியுள்ளனர்.

இந்த அதி வேகப் பாடலில் ஆடுவதற்காகவேஆறு கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் கருணாஸ். பெரும் நட்சத்திரப் பட்டாளம் இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com