கமலுடன் மீண்டும் மாதவன்!

'உன்னைப்போல் ஒருவன்' படத்தையடுத்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் 'யாவரும் கேளிர்'. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தைக் கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உ
கமலுடன் மீண்டும் மாதவன்!
Updated on
1 min read

'உன்னைப்போல் ஒருவன்' படத்தையடுத்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் 'யாவரும் கேளிர்'. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தைக் கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகும் இதில் த்ரிஷா முதல்முறையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேருகிறார். 'அன்பே சிவம்' படத்தில் கமலுடன் நடித்த மாதவன், இந்தப் படத்திலும் கமலுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது ஹிந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் மாதவன், கமல்ஹாசனின் அழைப்புக்கு இணங்கி இந்தப் படத்தில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com