'காஸ்ட்லி' மாப்பிள்ளை!

தெலுங்குப் படவுலகின் பிரபலமான இளம் முன்ணணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மறைந்த என்.டி.ராமராவின் பேரனான இவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மணமகளின் பெயர் லட்சுமி பிரணதி. இவ
'காஸ்ட்லி' மாப்பிள்ளை!
Updated on
1 min read

தெலுங்குப் படவுலகின் பிரபலமான இளம் முன்ணணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மறைந்த என்.டி.ராமராவின் பேரனான இவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மணமகளின் பெயர் லட்சுமி பிரணதி. இவர், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரான சீனிவாஸின் மகள். பெரும் கோடீஸ்வரரான சீனிவாஸ் மணமகன் ஜூனியர் என்.டி.ஆருக்கு பங்களாக்கள், பண்ணை வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட ஏராளமான நகை, பணம் ஆகியவற்றை வரதட்சணையாக வழங்குகிறார். இதன் மதிப்பு சுமார் ரூ.500 கோடி மட்டுமே என்கிறது தெலுங்குப் படவுலகம்.

பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவிருந்த சூழ்நிலையில் தற்போது திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மணப்பெண் லட்சுமி பிரணதி, மைனர் என்பதும் திருமண வயதையே இன்னும் எட்டவில்லை என்பதும்தான் காரணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com