13- ஆண்டுகளாக...!

வில்லத்தனம், குணச்சித்திர வேடங்களில் நடித்து கதாநாயகனாக மாறியுள்ள கரண் நடிக்கும் புதிய படம் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. சரவணன், அஞ்சலி, கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை வி.சி.வடிவுட
13- ஆண்டுகளாக...!
Updated on
1 min read

வில்லத்தனம், குணச்சித்திர வேடங்களில் நடித்து கதாநாயகனாக மாறியுள்ள கரண் நடிக்கும் புதிய படம் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. சரவணன், அஞ்சலி, கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

''சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வாழ்ந்த மக்களின் உண்மைக் கதையைத்தான் படமாக எடுக்கிறோம். அவ்வாறுவாழ்ந்தவர்களின் உண்மைப் பெயர்களையே படத்தின்கதாபாத்திரங்களுக்கும் வைத்துள்ளோம். ஒருவன் கல்லூரியில் படிக்கும்போது பெரிய அளவில் எந்தப் பிரச்னையையும் சந்திப்பதில்லை. படித்துமுடித்துவிட்டு சொந்தக் காலில் நிற்க நினைக்கும்போதுதான் பிரச்னையே துவங்குகிறது. அப்படி... பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் ஒருவனுடைய வாழ்க்கையை கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் புத்திசாலித்தனம் கலந்து சொல்லியிருக்கிறோம். கடந்த 13 ஆண்டுகளாக இந்த உண்மைக் கதைக்கு திரைவடிவம் கொடுத்து கவனமுடன்செதுக்கியிருக்கிறேன். ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார் இயக்குநர் வி.சி.வடிவுடையான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com