

வானத்தில் மீன் வடிவில் நட்சத்திரக் கூட்டம் இருக்கும். இதை ரேவதி நட்சத்திரம் என்பார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரேவதி நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் புண், சொறி, சிரங்கு, கட்டிகள், உடல் வீக்கம், வலிப்பு நோய், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல், கல்லீரல் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணம், சளி, இருமல், தோல் நோய்கள், தலை நோய்கள், மூட்டு வாதம், மூலம் போன்ற நோய்கள் உண்டாகின்றன. அவற்றை ரேவதி நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் குணப்படுத்துகின்றன. வியாழக்கிழமை பிறந்தவர்களையும், பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்களையும் ரேவதி நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்தக் காலங்களில் ரேவதி நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் பூமியில் அதிக அளவில் படும். இவற்றை இலுப்பை மரம் தன் உடலுக்குள் சேர்த்து வைத்துக் கொள்ளும்.
ரேவதி நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்க அரை மணி நேரம் இலுப்பை மரத்தைக் கட்டிப்பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் ஓய்வு எடுக்கலாம். அல்லது இதன் பூ, பழம் , பட்டை, வேர், இலைகளைக் கொண்டு மருத்துவம் செய்யலாம்.
இலுப்பை மரத்தின் மருத்துவக் குணங்கள்
பட்டை : இலுப்பை மரத் தின் பட் டைக்குப் பசி யைத் தூண்டும் தன்மை உள்ளது. இதன் பட்டையைத் தண்ணீரில் ஊறவைத்து புண், சொறி, சிரங்குகள், தோல் நோய்களுக்கு மேல் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். இலுப்பை மரப்பட்டையைக் கஷாயமிட்டு சர்க்கரை நோய், கீல் வாதம், உள்நாக்கு வீக்கத்திற்கு நல்ல மருந்தாகத் தருகிறார்கள்.
எண்ணெய் : இடுப் புவலி, மூல நோய், மலச் சிக்கல், மார்புச் சளி, ஜலதோஷம், மார்பு வலிகளுக்கு இலுப்பை எண்ணெய் மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இலுப்பை எண்ணெய், கடுகு எண்ணெய், புங்க எண்ணெய் மற்றும் பசு நெய்யுடன் கலந்து, தண்ணீர் விட்டுக் கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். இதை மார்பு வலிகளுக்கும், சைனஸ் பிரச்னைகளுக்கும் மேல்பூச்சு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து ஒரு வாரம் இதைப் பூசுவதால் நோய் குறையும்.
புண்ணாக்கு : இலுப்பைப் புண் ணாக்கிற்கு நச்சு நீக் கும் தன்மை இருக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்காக உண்ட நச்சுப் பொருட்களை இலுப்பைப் புண்ணாக்கு வெளிக் கொணர உதவுகிறது.
பூக்கள் : இலுப்பை மரப் பூக் கள் ஆண்மை சம் பந் தப் பட்ட பிரச் னை களைப் போக்கப் பயன்படுகிறது.
இலுப்பைப் பூக்களை ஊற வைத்துக் குடிநீர் செய்து குடித்து வந்தால் இருமல், உடல் உஷ்ணத்தால் வரும் காய்ச்சல், தண்ணீர் தாகம் குணம் பெறும்.
பழம் : இலுப் பைப் பழம் மலச் சிக் கல், வயிற் றுப் பிரச்னைகள், சிறுநீர் கழிப்பதில் வரும் பிரச்னைகள், மூட்டு வலி, இடுப்பு வலி, பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கும் நல்ல மருந்தாக விளங்குகிறது.
இலுப்பை மரங்கள் பெருமளவில் வாணியம்பாடியிலுள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியில் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(முற்றும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.