வெண்புள்ளிகள் நோயல்ல, பிறருக்குத் தொற்றும் தன்மை கொண்டதல்ல, பரம்பரையாக வருவதல்ல என்ற அறிவியல் உண்மையை எடுத்துரைத்து கடந்த 13 வருடங்களாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்.
மருத்துவ ஆலோசனையோடு தற்போது வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களின் திருமணம் நடைபெற உதவும் வகையில் வெண்புள்ளிகள் குடும்பம் என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளது. வெண்புள்ளிகள் குடும்பமா? அப்படியென்றால்..
இது குறித்து அதன் செயலாளர் கே. உமாபதி அவர்களிடம் கேட்டோம்.
வெண்புள்ளிகள் குடும்பம் எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது?
வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் 15 முதல் 40 வயது வரை உள்ள இளைய பருவத்தினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 36 லட்சம் பேர் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நமது நாட்டின் மக்கள் தொகையில் இது 6 கோடி. இவர்களின் திருமணம் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பரஸ்பரம் பகிர்ந்துக் கொள்ள உருவாக்கப்பட்டது தான் வெண்புள்ளிகள் குடும்பம்
இதில் யார் யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்?
வெண் புள் ளி களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தின் பிற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர் குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கு வெண்புள்ளிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக திருமண இணை தேடுபவர்களை வெண்புள்ளிகள் குடும்பம் என்ற அமைப்புக்குள் சேர்க்கிறோம். அவரவர் கல்வித் தகுதி, சம்பளம், எதிர்பார்ப்பு, ஜாதகம், போன்றவற்றை வெண்புள்ளிகள் குடும்பத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும் தெரிவிக்கிறோம். அவரவர் விருப்பத்திற்கேற்ப சம்பந்தபட்ட குடும்பங்கள் கலந்து பேச ஏற்பாடு செய்து தருகிறோம்.
வெண்புள்ளிகள் குடும்பத்தின் சிறப்பம்சம் என்ன?
மிகப் பெ ரிய சிறப் பம்சம் மனநிம்மதி. வெளிநாடுகளில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இணைந்து செயல்படுகின்றன, வெண்புள்ளிகளை மறைக்க எந்த மாதிரியான மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள், உறவினர்களையும் நண்பர்களையும் சமூகத்தையும் எப்படி எதிர்கொள்கிறார்கள், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்- இளம்பருவத்தினரை எப்படி வளர்க்கிறார்கள் போன்ற பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறார்கள். விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வது, ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டிக் கொள்வது, செய்திகளைப் பரிமாறிக்கொள்வது போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். இது பாதிக்கப்பட்டவரின் மனதில் ஆறுதலையும் தேறுதலையும் ஏற்படுத்தி அவர்கள் இயல்பான வாழ்க்கை மேற்கொள்ள உதவுகிறது. இதே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான் வெண்புள்ளிகள் குடும்பம். அதன் சிறப்பும் இதுதான்.
அதற்கடுத்து வெண்புள்ளிகள் குறித்த புரிதல் கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்துகொள்வதன் வாயிலாக, நாளை என்னவாகுமோ என்ற அன்றாடம் அலைகழிக்கும் அச்சத்திலிருந்து விடுதலை. இப்படி பல்வேறு அம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிம்மதியை பாதிக்கபட்டவர்களால் மிகத் தெளிவாக உணரமுடியும்.
வெண்புள்ளிகள் கொண்ட ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்ய உதவுவீர்களா?
பாதிக் கப் பட் ட வர்கள் இடையே மட்டுமல்ல. வெண்புள்ளிகள் பாதிப்பு உள்ளவரின் பிற குடும்ப உறுப்பினர்கள் (வெண்புள்ளி இல்லாதவர்கள்) முன்வரும் போது அவர்களுக்கும் பாதிக்கபட்டவர்கள் இடையிலும் திருமணம் செய்து வைக்கிறோம். இப்படி வெண்புள்ளிகள் குறித்த புரிதல் கொண்ட குடும்பங்களில் திருமணம் செய்துகொள்வது மிகவும் பாதுகாப்பான உணர்வு பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. உண்மையில் மிகச் சிறந்த பாதுகாப்பும் இதுதான். எனவே வெண்புள்ளிகள் குடும்பத்தில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.
இதுவரை எத்தனை திருமணங்கள் நடத்தி இருக்கிறீர்கள்?
கடந்த பதி மூன்று வரு டங் க ளில் எங்களால் ஒன்பது திருமணங்கள் மட்டுமே நடத்த முடிந்துள்ளது. காரணம் இளையபருவத்தினர் அல்ல. கல்வித்தகுதி, வயது, வேலை, சம்பளம், இவை எல்லாவற்றையும் கடந்து வேறு சில கெடுபிடிகள் கொண்ட பெற்றோரின் எதிர்பார்ப்பே.
இந்த 9 தம்பதியரின் வாழ்கை எப்படி இருக்கிறது?
மிக மகிழ்ச் சி யான வாழ்க்கையை, பிள்ளைச் செல்வங்களோடு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய திருமணங்கள் பெருகுவது வெண்புள்ளிகளால் பாதிப்பட்டவர்களை இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வருவது மட்டுமல்ல. வெண்புள்ளிகள் பரம்பரை, பரம்பரையாக வரும் என்ற புரையோடிப் போன தவறான கருத்தை புரட்டி போடும் நெம்புகோள்களாக இந்த திருமணங்கள் திகழும் என்பதற்காக.
வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர் எப்படி தொடர்பு கொள்வது?
வெண் புள் ளி கள் விழிப்புணர்வு இயக்கத்தை 044 - 65381157, 22265507 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.