இயக்குநர் சசியிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜய் ஆதித்யா இயக்கி வரும் புதிய படம் "ஈசல்'. ஆறு மணி நேரத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் உலக சாதனை முயற்சியாக ஒரு பாடல் இடம்பெறுகிறது.
அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, ஒரியா, மராட்டி, துளு, பெங்காலி உள்பட 24 மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பாடல் எழுதப்பட்டிருக்கிறது. வெங்கட் எழுதியுள்ள இந்தப் பாடலை மிதுன் ஈஸ்வரின் இசையில் 24 மொழிகளைச் சேர்ந்த பிரபலங்கள் பாடுகிறார்கள். மலையாள வரிகளை நடிகர் மம்முட்டி பாடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.