விநாயகா: காதல் படம்!

தெலுங்கில் பெரும் வெற்றியடைந்த "விநாயகடு' படம், "விநாயகா' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. "லவ் டுடே', "துள்ளித் திரிந்த காலம்', "காதல் சுகமானது', "ஆரியா' படங்களை இயக்கிய பாலசேகரன் இந்தப் படத்தை இயக்
விநாயகா: காதல் படம்!
Updated on
1 min read

தெலுங்கில் பெரும் வெற்றியடைந்த "விநாயகடு' படம், "விநாயகா' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. "லவ் டுடே', "துள்ளித் திரிந்த காலம்', "காதல் சுகமானது', "ஆரியா' படங்களை இயக்கிய பாலசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். புதுமுகம் கிருஷ்ணா, சோனியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். காதல் படங்களிலிருந்து கடவுள் படங்களுக்கு மாறிவிட்டீர்களா என கேட்டபோது...

""இதுவும் காதல் படம்தான். காதலுக்குத் தடையாகப் பல பிரச்னைகள் இருந்திருக்கின்றன. விநாயகா படத்தில் இதுவரை சொல்லப்படாத ஒரு பிரச்னையைக் கையாண்டிருக்கிறோம். சாட்டிங்கில் நட்பாகும் ஓர் இளைஞனும் யுவதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமலேயே காதலிக்கிறார்கள்.

இருவரும் திட்டமிட்டு சந்திக்கும்போது குண்டாக இருக்கும் நாயகனைப் பார்த்து நாயகி அதிர்ச்சியடைகிறாள். உடனே, இத்தனை நாள்கள் சாட்டில் உரையாடியதும் காதலித்ததும் தான் இல்லை தன்னுடைய தோழிதான் என பொய் சொல்கிறாள்.

அதைக் கேட்டு நொந்துபோகும் நாயகன், இறுதியில் தன் காதலில் வெற்றியடைகிறானா இல்லையா என்பதே கதை. கதைக்கேற்றபடி 95 கிலோ எடையுள்ள கிருஷ்ணன் என்பரை நடிக்க வைத்திருக்கிறோம். உண்மையான காதலுக்கு உருவம் முக்கியமில்லை; உள்ளம்தான் முக்கியம் என்பதுதான் கதைக் கரு.

வைரமுத்துவின் பாடல்களுக்குச் சாம் பிரசன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார் இயக்குநர் பாலசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com