திரைக்கதிர்: அடுத்த "படி'யில் ஆர்யா!

நடிகர் ஆர்யா "படித்துறை' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை பாலுமகேந்திராவின் உதவியாளர் சுகா இயக்குகிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில்
திரைக்கதிர்: அடுத்த "படி'யில் ஆர்யா!
Updated on
1 min read

நடிகர் ஆர்யா "படித்துறை' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை பாலுமகேந்திராவின் உதவியாளர் சுகா இயக்குகிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

""மனிதர்களுக்கும் ஆற்றங்கரைக்கும் பாலமாக இருப்பது படித்துறை. அதிலுள்ள ஏற்றத் தாழ்வுகள் போல மனிதர்களின் வாழ்க்கையும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. இதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறோம். நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் நடைபெறும் காதல், மோதல், நட்பு போன்ற விஷயங்களைப் பாசாங்கு இல்லாமல் காட்டியிருக்கிறோம். இந்தப் படத்துக்காக  எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் ஆகியோர் முதல்முறையாகப் பாடல்களை எழுதியுள்ளனர்.

இளையராஜாவின் இசை ரசிகர்களைப் பரவசப்படுத்தும். எந்த இமேஜுக்குள்ளும் சிக்காத நட்சத்திரங்களை நம்பி படத்தை உருவாக்கியிருக்கிறோம். படம் வெளிவந்த பிறகு தரமான தயாரிப்பாளர்கள் பட்டியலில் ஆர்யாவின் பெயரும் இடம்பெறும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com