

தாய் - மகன் பாசத்தை மையமாக வைத்து "சிவசிவா' என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. புதியவர் சிவாஷ் பாடல்கள் எழுதி படத்தை இயக்குகிறார். தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் "சிவசிவா' பற்றி கேட்டபோது...
""தன்னுடைய உலகமே பிள்ளைதான் என்று வாழ்கிற தாய்க்கும்'' தன்னுடைய அம்மாதான் உலகம் என வாழ்கிற மகனுக்கும் இடையே ஓர் இளம்பெண் குறுக்கிடுகிறாள். இதனால் தாய்ப்பாசத்துக்கும் காதலுக்கும் இடையே தவிக்கும் மகனுடைய உணர்வுகளை உருக்கமாகக் கூறுகிறோம். இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்துக்கு மாறன்ஜி இசையமைத்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "அறியாத வயதில் புரியாத காதல் அதனாலே எனக்கு உன்னோடு மோதல்' என்ற பாடலும் "ஒரு நிமிஷம் தோழான்னா மறு நிமிஷம் உயிர் கொடுப்பேன்டா' என்ற பாடலும் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளன. படத்தில் இடம்பெறும் ஆட்டோ ரேஸ் காட்சி, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.