திரைக்கதிர்: பயங்கர ராகம்!

"மர்மதேசம்' தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான நாகா, "ஆனந்தபுரத்து வீடு' படத்தின் மூலம் திரைப்பட இயக்குநர் ஆகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்கிறார். "ஆனந்தபுரத்து வீடு', படத்துக்கான தாமத
திரைக்கதிர்: பயங்கர ராகம்!
Updated on
1 min read

"மர்மதேசம்' தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான நாகா, "ஆனந்தபுரத்து வீடு' படத்தின் மூலம் திரைப்பட இயக்குநர் ஆகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்கிறார். "ஆனந்தபுரத்து வீடு', படத்துக்கான தாமதம் குறித்து இயக்குநர் நாகாவிடம் கேட்டபோது...

""படம் தொடங்கி ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.

ஆனால் இது தாமதம் அல்ல. இந்தக் கதைக்கு இந்த நேரம் தேவைதான். படப்பிடிப்பு ஒன்பது மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் படத்தில் இடம்பெறும் சில நுணுக்கமான கிராஃபிக்ஸ்  காட்சிகளை சிறப்பாக எடுக்கவே இந்த கால அளவு தேவைப்பட்டது.

ஆனந்தபுரத்தில்  உள்ள ஒரு வீட்டில் நடைபெறும் த்ரில்லான சம்பவங்களே கதை. ஆவிகள் தொடர்பான கதை என்றாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒரு குடும்பக் கதைதான்.

படத்தின் 90 சதவீத காட்சிகள் வீட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளன. இதற்காக நாங்கள் விரும்பியபடி ஒரு வீட்டை நாகர்கோவிலில் தேர்ந்தெடுத்து அதில் சில மாற்றங்களைச் செய்து படப்பிடிப்பு நடத்தினோம்.

படத்தில் மூன்று பாடல்கள். மூன்றுமே வசந்த ராகத்தில் இருக்கும். இந்த ராகம் ஒருவித பயம், ரகசியம் போன்றவற்றை உணர்த்தும். புதியவர் ரமேஷ்கிருஷ்ணாவின் இசை பெரிய அளவில் பேசப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com