திரைக்கதிர்:18ம் நூற்றாண்டின் கதை!

"ஆலி' படத்தையடுத்து "அரவான்' படத்தில் கவனம் செலுத்துகிறார் ஆதி. இந்த இரண்டு படங்கள் பற்றியும் அவர் சொன்னவை:  ""ஒரு பெரிய குடும்பத்துக்குள் காதல் நுழைகிறது. அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் "ஆடுபுலி'. பி
திரைக்கதிர்:18ம் நூற்றாண்டின் கதை!
Updated on
1 min read

"ஆலி' படத்தையடுத்து "அரவான்' படத்தில் கவனம் செலுத்துகிறார் ஆதி. இந்த இரண்டு படங்கள் பற்றியும் அவர் சொன்னவை:  ""ஒரு பெரிய குடும்பத்துக்குள் காதல் நுழைகிறது. அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் "ஆடுபுலி'. பிரபுவின் மகனாக நடித்துள்ளேன். எனக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார்.

சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்தின் மூலம் நானும் பூர்ணாவும் நண்பர்களாகி விட்டோம். பூர்ணா எளிமையாகப் பழகக் கூடியவர். முதல் சந்திப்பிலேயே நீண்ட நாள் நண்பர் போல் பேசத் தொடங்கி விட்டார். மற்ற படங்களைவிட இந்தப் படத்தில்தான் ஹீரோயினுடன் நிறைய காட்சிகள் உள்ளன. காதல் காட்சிகளில் நானும் பூர்ணாவும் ஆர்வமாக நடித்தோம்.

அதற்குக் காரணம் எங்களுக்குள் இருந்த நட்புதான். எல்லா அம்சங்களும் உடைய கமர்ஷியல் படமாக "ஆடுபுலி' வந்துள்ளது. அடுத்து வசந்தபாலன் இயக்கும் "அரவான்' படத்தில் நடிக்கிறேன். 18-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. இப்படத்துக்காக விசேஷ ஆடைகள் அணிந்து நடித்திருக்கிறேன்.

பெண்கள் உள்பட அனைவருக்கும் வித்தியாசமான ஆடைகள்தான். இந்தப் படம் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும். இக்கதைக்காக வரலாற்று ரீதியிலான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் இயக்குநர் வசந்தபாலன். கமர்ஷியல் படங்களுக்கு என் கேரியரில் சம பங்கு அளிப்பேன். இப்போதைக்கு தமிழில்தான் கவனம் செலுத்துகிறேன்'' என்றார் ஆதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com