சகாக்களின் யாத்திரை!

சகாக்களின் யாத்திரை!

வி.வி.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "சகாக்கள்'. "குளிர்' படத்தின் மூலம் அறிமுகமான சஞ்சீவ் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். புதுமுகங்கள் பலர
Published on

வி.வி.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "சகாக்கள்'. "குளிர்' படத்தின் மூலம் அறிமுகமான சஞ்சீவ் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். புதுமுகங்கள் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க எல்.முத்துக்குமாரசுவாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியது, ""பழனிக்குப் பாத யாத்திரை போகும் குழுவினரின் காதல், அன்பு, பிரிவு, பிரச்னைகள்தான் கதை. நினைக்க நினைக்கத் தித்திக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களை இணைந்து பாடிய எஸ்.பி.பி. - சித்ரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து டூயட் பாடலை இப்படத்துக்காகப் பாடியுள்ளனர்.

"இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதே...' எனத் தொடங்கும் அப்பாடலைப் பாடி முடித்த அவர்கள் ஓர் அற்புதமான பாடலைப் பாடிய திருப்தி தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்தார்கள். புதுமுக இசையமைப்பாளர் தயா ரத்தினம் என்பவரின் இசையமைப்பில் உருவாகியுள்ள அப் பாடல் தற்கால சினிமாவின் முக்கிய பாடலாக இருக்கும்.

பாஸ்கர் சக்தி வசனம் படத்தின் திரைக்கதைக்குக் கூடுதல் பலமாக இருக்கும்'' என்றார் எல்.முத்துக்குமாரசுவாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com