சுற்றுச்சூழல்: தூரிகைகளுக்காக அழிக்கப்படும் கீரிப்பிள்ளை!

வன வி லங் கு கள் என் றாலே சிங் கம், புலி, யானை, சிறுத்தை, கரடி, ஓநாய் என்ற ஊனுண் ணி கள் தான் முத லில் நினை வுக்கு வரு ம். ஆனால், சத் தம் போடா மல் வனத் தை யும் சுற் றுச் சூ ழ லை யும் பாது காப் ப தில் ப
சுற்றுச்சூழல்: தூரிகைகளுக்காக அழிக்கப்படும் கீரிப்பிள்ளை!
Updated on
2 min read

வன வி லங் கு கள் என் றாலே சிங் கம், புலி, யானை, சிறுத்தை, கரடி, ஓநாய் என்ற ஊனுண் ணி கள் தான் முத லில் நினை வுக்கு வரு ம். ஆனால், சத் தம் போடா மல் வனத் தை யும் சுற் றுச் சூ ழ லை யும் பாது காப் ப தில் பெரும் பங் காற் று பவை சிறு ஊன் உண் ணி கள் எனப் ப டும் பூனை வகை கள், கீரி வகை கள் மற் றும் நீர் நாய், மர நாய் போன் ற வை க ளா கும். இவையே விவ சா யி க ளின் தோழர் க ளா க வும் அழைக் கப் ப டு கின் றன.

மாமிச பட்சிகளான ஊனுண்ணிகளில் 5 முதல் 8 கிலோ எடை வரையுள்ள விலங்குகளே சிறு ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. நகரமயமாக்கலினாலும், விவசாய நிலங்கள் அழிந்து வருவதாலும் பல வருடங்களுக்கு முன்னர் கிராமங்களில் நமது வீடுகளுக்கு அருகில்  சுற்றிக் கொண்டிருந்த இவ்விலங்குகள் தற்போது வனப்பகுதிகளை மட்டுமே நம்பி வாழக்கூடிய நிலையிலுள்ளதால் பெரும்பாலானவை அழிவின் விளிம்பிலுள்ளன.

உலகிலுள்ள ஊன் உண்ணிகளில் 54 சதம் சிறு ஊன் உண்ணிகளேயாகும்.

அழிந்துவரும் நிலையிலுள்ள இத்தகைய சிறு ஊன் உண்ணிகளைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள கோவையை சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் கார்த்திகேயன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:

""சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், இயற்கை மேம்பாட்டிலும் சிறு ஊன் உண்ணிகளின் பங்கு மிக அதிகமாகும். பூனை வகைகளில் மலபார் பூனை, காட்டுப்பூனை, சிறுத்தைப்பூனை, மீன் பிடி பூனை, புனுகு பூனை, செம்புள்ளி பூனை போன்ற வகைகளும், மங்கூஸ் எனப்படும் கீரி இனத்தில் காமன் கிரே, ருடி மங்கூஸ், பிரவுன் மங்கூஸ், ஸ்டிரைப்படு நெக் மங்கூஸ் போன்ற பல வகைகளும், மர நாய், நீர் நாய் போன்றவைகளும் சிறு ஊன் உண்ணிகள் வகையில் அடங்கும்.

இவற்றில் புனுகு பூனைகள் வாசனை திரவியமான புனுகுக்காகவே அதிக அளவில் கொல்லப்பட்டுவிட்டன. பழத்தோட்டங்களில் குறிப்பாக காபி தோட்டங்களில் காணப்படும் இவ்வகைப் பூனைகள் காபி கொட்டைகளைத்தின்று வெளியேற்றும் கழிவுகளில் கிடக்கும் கொட்டையை எடுத்து மீண்டும் நடவு செய்யும்போது அந்தக் காபி கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் காபி அதிக மணம் கொண்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே இந்தோனேசிய காப்பித்தோட்டங்களுக்காகவே ஏராளமான புனுகுப் பூனைகள் வீட்டு வளர்ப்பாக மாறிவிட்டன.

அதேபோல பாம்பாட்டிகளிடம் மட்டுமே நாம் பார்த்த கீரிப்பிள்ளை தற்போது எங்கு இருக்கின்றதென்றே தெரியவில்லை. அழகான இவற்றின் வால் முடியைக் கொண்டு ஓவியம் தீட்டுவதற்கான தூரிகைகளைத் தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டதால் கீரிப்பிள்ளை இனம் அதற்காகவே அழிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் இறைச்சிக்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்பட்டு விட்டன.

நீர் நாய் இனமும் கோவையில் காணப்பட்டது. தற்போது இவை முல்லைப் பெரியார் அணைப்பகுதியில் அதிகளவில் இருப்பதால் இரவு நேரங்களில் சிலர் வேட்டையாடி அழிக்கின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மட்டுமே காணப்படும் இவ்வினங்கள் தற்போது இறைச்சிக்காக மட்டுமின்றி பல்வேறு வணிக நோக்கோடும் தொடர் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இவற்றோடு நீலகிரி மார்ட்டின், டாப் சிலிப் பகுதியில் காணப்பட்ட தரைக்கரடி போன்ற சிறு வனவிலங்குகளும் தற்போது காணக் கிடைக்காதவையாகி வருகின்றன. எனவே, இத்தகைய சிறு ஊன் உண்ணிகளைக் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்'' என வலியுறுத்தினார் கார்த்திகேயன்.

இக்கருத்து தொடர்பாக கோவையிலுள்ள "ஓசை' அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான காளிதாசிடம் கேட்டபோது, இக்கருத்தை ஆமோதித்த அவரும், ""சிறு ஊன் உண்ணிகள் குறித்த கணக்கெடுப்பையும், ஆய்வையும் தொடர வேண்டியது அவசியம்.

சிறு ஊன் உண்ணிகள் இருந்தால்தான் காடு வளரும். இவை பெரும்பாலும் இரவு வாழ்க்கையையே கொண்டிருப்பதால் பகலில் அதிகளவில் அவற்றை காண முடியாது. அதனால் இவை குறித்த கணக்கெடுப்பை நடத்துவது கடினமென்பதால் இத்தகைய சிறு ஊன் உண்ணிகளைக் குறித்து ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com