திரைக்கதிர்: கண் முன்னால் நின்ற படம்!

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற "வேதம்' தமிழில் வானம் என்ற பெயரில் ரீமேக்காகிறது. சிம்பு, பரத், அனுஷ்கா, சினேகா உல்லால், வேகா, பிரகாஷ்ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க படமாக்கி வருகிறார் தெலுங்கில்
திரைக்கதிர்: கண் முன்னால் நின்ற படம்!
Updated on
1 min read

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற "வேதம்' தமிழில் வானம் என்ற பெயரில் ரீமேக்காகிறது. சிம்பு, பரத், அனுஷ்கா, சினேகா உல்லால், வேகா, பிரகாஷ்ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க படமாக்கி வருகிறார் தெலுங்கில் கவனம் ஈர்த்த இயக்குநர் கிருஷ்.

இவ்வளவு நட்சத்திரங்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவது சிரமம்தானே? எனக் கிருஷிடம் கேட்டால், ""சிரமம்தான். இருந்தாலும், இந்தக் கதை ஏற்கனவே என் கண் முன்னால் படமாகி நிற்கிறது. இந்தக் கேரக்டர் எப்படி? என்ன செய்ய போகிறார்? என்று நான் பார்த்து விட்டேன். சிம்பு, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் என இவ்வளவு பெரிய நடிகர்கள் கிடைக்காமல் இருந்தால்தான் இந்தக் கதைக்குப் பிரச்னை.

பெரிய நடிகர்கள் கிடைத்து விட்டதால் எனக்கு எந்த விதத்திலும் சிரமம் இல்லை. இதுதான் கதை. இதை நாம் சிறப்பாக செய்து முடிக்கிறோம் இரண்டு நாள்களிலேயே செட் ஆகி விட்டார் சிம்பு. நிறைய சிரமங்களுக்குப் பின் இதை முடித்து காட்டப் போகிறோம். இந்தப் படத்தில் நீங்கள் சந்திக்கிற நபர்கள் யாருமே நல்லவர்கள் அல்ல. தன் வாழ்க்கையை மட்டுமே பார்க்கிற கேரக்டர்கள். வாழ்க்கையின் நிலையாமை பற்றி இந்த கேரக்டர்கள் நன்றாக உணர்த்துவார்கள்.

தன் வாழ்வு பற்றிய எண்ணங்களுடன் வாழும் சில பேர் ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். அப்போது ஏற்படும் உணர்வுகள்தான் கதை. பாடல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் பாடல்களுக்குச் சிறந்த காட்சி அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம். இதற்காக மும்பை ஃபிலிம் சிட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் தளங்கள் ஏற்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு'' என்றார் இயக்குநர் கிருஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com