திரைக்கதிர்

ஹிட் ஆகும் தமிழ்ப் படங்களை உடனே சி.டி.யில் பார்த்துவிடும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் அண்மையில் "மங்காத்தா' படத்தை (திருட்டு) சி.டி.யில் பார்த்திருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் ப
திரைக்கதிர்
Updated on
2 min read

ஹிட் ஆகும் தமிழ்ப் படங்களை உடனே சி.டி.யில் பார்த்துவிடும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் அண்மையில் "மங்காத்தா' படத்தை (திருட்டு) சி.டி.யில் பார்த்திருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு  ஃபோன் செய்த சல்மான், "படம் சூப்பர்; ஆனால் நான் பார்த்த சி.டி. பிரிண்ட் சரியில்லை. எனவே எனக்கு ஒரிஜினல் பிரிண்ட் ஒன்றை அனுப்பி வையுங்கள்' என்று கேட்டிருக்கிறார். உடனே ஒரு ஒரிஜினல் டிஜிட்டல் பிரிண்ட் விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

"யாவரும் நலம்', "தீராத விளையாட்டுப் பிள்ளை' படங்களில் நடித்த நீது சந்திரா தயாரிப்பாளர் ஆகிறார். அவர் நடித்துள்ள தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அல்ல; குறைந்த பட்ஜெட்டுக்குப் பெயர் போன போஜ்புரி மொழியில் ஒன்றரைக் கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்.

ஹன்சிகா மோத்வானிக்கு விதவிதமான காலணிகள் அணிவதில் அலாதிப் பிரியம். எப்போது ஷாப்பிங் சென்றாலும் ஒரு ஜோடி புதிய காலணியை வாங்கி விடுவாராம். தற்போது  அவர் வசம் சுமார் 200 ஜோடி காலணிகள் உள்ளனவாம்.

அரசியல் புயலில் தூக்கி வீசப்பட்டதால் குறைந்துவிட்ட வைகைப் புயலின் வாய்ப்புகள்  சந்தானத்தைத் தேடி வருகின்றன. இன்றைய தேதியில் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளம் பெறுகிறார்.

அரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் வைத்திருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அதன் பிறகு ஒன்றரை கோடி மதிப்புள்ள ஹம்மர் கார் வாங்கினார்.  இப்போது இரண்டரை கோடி மதிப்புள்ள பென்ட்லே என்ற புதிய காரையும் வாங்கியுள்ளார். இசைக்குப் பிறகு ஹாரிஸýக்குப் பிடித்த விஷயம் விதவிதமான கார்கள்.

இசை ஆல்பங்களுக்காகவும் ஹாலிவுட் பட இசையமைப்புக்காகவும் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமாவே பார்க்கவில்லை என்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

கருத்து வேறுபாடு காரணமாக தனியாகப் பிரிந்து இசையமைத்து வந்த ஹரிஹரன், மீண்டும் தனது நண்பர் லெஸ்லியுடன் இணைந்து இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த உபாசனாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக ஏராளமான கோடிகளுடன் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட ஒரு குட்டி விமானமும் மாப்பிள்ளைக்குப் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மும்பையில் கிரிக்கெட் "பெட்டிங்'குக்கு சமமாக இன்றைய தேதியில் இன்னொரு பெட்டிங்கும் நடந்துவருகிறது. அது... ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா என்பதுதான். பிரபல ஜோதிடர்கள் பலரும் ஆண் குழந்தைதான் என ஆருடம் கூறியிருக்கிறார்கள்.

இந்திய - சீன கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் "தி டிசையர்' இந்திப் படத்தில் ஒடிசி நடனக்கலைஞராக நடிக்கிறார் ஷில்பா ஷெட்டி. இதனால் தினமும் நான்கு மணி நேரம் ஓடிசி நடனம் கற்று வருகிறார்.

ஒரு "ஹிட்' படத்தை இயக்கிவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியாக இருந்தார் "எங்கேயும் எப்போதும்' இயக்குநர் சரவணன். படம் "ஹிட்' ஆகியுள்ளதால் தனது உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தயாராகிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com