ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இதய நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க...

Stent! எனப்படும் நுண்ணிய செயற்கைப் பொருளை இதய நாளங்களில் செலுத்தி அடைப்பை நீக்குவதே Angio Plasty. சிகிச்சை முடிந்தும் கூட செயற்கைப் பொருளான இந்த Stent அந்த ரத்தநாளத்தில் ஆயுள் முழுவதும் உட்கார்ந்து கொ
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இதய நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க...
Updated on
2 min read

Stent! எனப்படும் நுண்ணிய செயற்கைப் பொருளை இதய நாளங்களில் செலுத்தி அடைப்பை நீக்குவதே Angio Plasty. சிகிச்சை முடிந்தும் கூட செயற்கைப் பொருளான இந்த Stent அந்த ரத்தநாளத்தில் ஆயுள் முழுவதும் உட்கார்ந்து கொண்டிருக்கும். எந்த ஒரு செயற்கைப் பொருளையும் மனித உடல் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த Stent உடலால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக மாதம் ரூ.4000 செலவாகிறது. ஏழை இதய நோயாளிகள் மாதம் ரூ.4000 செலவு செய்ய முடியுமா? இதய நாளங்களிலுள்ள அடைப்புகளை நீக்க ஆயுர்வேத சிகிச்சை முறைகள் எவை?

எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.

வியானன்' என்ற ஒரு வாயு இதயத்திலிருந்து செயல்படுகிறது. இருதய நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் இந்த வியான வாயுவுக்கு ஏற்படும் கதி முடக்கத்தினால், இதயப் பகுதியில் வலியை ஏற்படுத்தி, அதிகமான வியர்வையை உண்டாக்கி, உடலை முடக்கி

விடுகிறது. அடைப்பை நீக்கக் கூடிய, சூடான வீர்யம் கொண்ட மருந்துகளால், வாயுவின் கதிமுடக்கத்தைச் சீராக்கிவிட்டால், இதய நோயின் தாக்கத்திலிருந்து விரைவில் விடுபடலாம். "ஹிங்குவசாதி' எனும் ஓர் ஆயுர்வேத சூரண மருந்து இருக்கிறது. பெருங்காயம், வசம்பு, கடுக்காய்த் தோடு, ஆடு தீண்டாபாளை வேர், மாதுளம் பழத்தோடு, ஓமம், கொத்தமல்லி, வட்டத் திருப்பி, புஷ்கர மூலம், கச்சோலம், கொட்டக்

கரந்தை, கொடுவேலி, யவக்ஷôரம், ஸர்ஜக்ஷôரம், இந்துப்பு, விளையுப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், காட்டுமிளகின் வேர், புளிவேரின் தோல், கொடம்புளி ஆகியவற்றின் ஸம அழிவின் சேர்க்கையினால் தயாரிக்கப்படும் இந்த சூரணம் 5 கிராம் முதல் 8 கிராம் வரை, அரை கிளாஸ் (சுமார் 15 மி.லி.) சூடான தண்ணீருடன், காலை உணவுக்குப் பிறகு தொடர்ந்து சுமார் 2 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை சாப்பிட மிகவும் நல்லது. அடைப்பை நீக்கி, வியான வாயுவின் செயல்திறனைக் கூட்டும் சக்தி கொண்டது.

அடைப்பை நீக்கி, வாயுவின் சீரான செயல்பாட்டைச் செய்வதில் "இந்துகாந்தம்' எனும் கஷாயமும் உதவக் கூடும். 15 மி.லி. கஷாயத்தில் 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, இரண்டு "வாயு குளிகை' எனும் மாத்திரையுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது.

பொதுவாகப் புளிப்புச் சுவையுடைய மருந்துகள் இதயத்துக்கு நல்லது. மாம்பழம், மாங்கொட்டை, இலந்தைப் பழம், மாதுளம் பழம், கடாரங்காய் போன்றவை இதயத்தை வலுப்படுத்தும் திறன் கொண்டவை. அதுபோலவே, புளி, இலந்தை, எலுமிச்சை, புளிப்பு திராட்சை ஆகியவையும் இதயத்தின் தசைப் பகுதிகளை வலுவடையச் செய்பவை என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ரத்தக் குழாய்களின் உட்புறப் பகுதிகளில் நுழைந்து அங்கு அடைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொழுப்பான பகுதிகளைக் கரையச் செய்ய - கடுக்காய், புங்கு, கோரைக் கிழங்கு, கோஷ்டம், வசம்பு, மஞ்சள், மரமஞ்சள், கொடுவேலி, கடுகு ரோஹிணி, அதிவிடயம் ஆகியவற்றைத் தூளாக்கி (வகைக்கு 5 கிராம்) சுமார் 1 லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் காய்ச்சி, 250 மி.லி. ஆனதும், வடிகட்டி, காலையில் 125 மி.லி., மாலையில் 125 மி.லி. வீதம் குடித்து,நம் முன்னோர் இதய அறுவைச் சிகிச்சைகளை அறவே தவிர்த்துவிட்டனர். உடல் பருமனைக் கரைத்துவிடவும் இதே மருந்துச் சரக்குகளைப் பயன்படுத்தி, குணமும் அடைந்தனர்.

வாயுவின் கதிமுடக்கம் நீங்கினாலும் அடைபட்டிருந்த காரணத்தால், செயல்திறன் சட்டென்று வளருவதில்லை. அதை மேம்படச் செய்வதில் 60 கிராம் மருதம் பட்டையை, 1 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, 250 மி.லி. ஆகும் வரை குறுக்கி, காலையில் 125 மி.லி., மாலையில் 125 மி.லி., சிறிது சூடான பசும்பாலுடன் குடிக்க மிகவும் நல்லது.

சீரான நடைப் பயிற்சி, யோகாசனம், எளிதில் செரிக்கக்கூடிய உணவு வகைகள், இடது

புறம் சரிந்து படுத்துறங்குதல், இரவில் படுக்கும் முன் சிறிது சூடான தண்ணீர் பருகுதல், அமைதியுடனிருத்தல், இயற்கை உபாதைகளை அடக்காதிருத்தல், பிறரிடம் அன்புடன், மகிழ்ச்சியுடன் பேசிப் பழுகுதல் போன்றவை இதய நோயைத் தள்ளி வைக்கும் சில எளிய வழிகளாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com