ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மாதவிடாய்க் கால மன உளைச்சலுக்குத் தீர்வு...?

எனக்கு வயது 42. 25 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு இருக்கிறது. பணியில் உள்ளதால் 20 நாட்களுக்கு மேல் மன உளைச்சல் உண்டாகி அதிகமாக வந்துவிடுமோ, ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று மிகவ
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மாதவிடாய்க் கால மன உளைச்சலுக்குத் தீர்வு...?
Updated on
2 min read

எனக்கு வயது 42. 25 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு இருக்கிறது. பணியில் உள்ளதால் 20 நாட்களுக்கு மேல் மன உளைச்சல் உண்டாகி அதிகமாக வந்துவிடுமோ, ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று மிகவும் பயமாக இருக்கிறது. கருப்பையில் ச்ண்க்ஷழ்ர்ண்க் இருக்கிறது. கருப்பையை எடுத்தே ஆக வேண்டுமா?

 ந.சே.ராஜீவி, கரட்டடிபாளையம்.

 ஒரு சில உணவுமுறைகள் உங்களுக்கு உதவிடக்கூடும். வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து 4 பங்கு சர்க்கரை சேர்த்து லட்டு தயாரித்து காலை மாலை வெறும் வயிற்றில் 1 -2 லட்டுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவும். வேறு ஒரு வழியும் இருக்கிறது. 15 கிராம் வறுத்த வெந்தயத்தில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, 250 மி.லி ஆனதும், வடிகட்டி, காலையில் 125 மி.லி மாலையில் 125 மி.லி வெறும் வயிற்றில் குடித்துவர, உங்களுக்கு மாதவிடாய் உரிய காலத்தில் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலியும் குறையும். மன உளைச்சலையும் குறைத்துவிடும். கோதுமை, அரிசி முதலியவற்றுடன் வெந்தயத்தையும் சேர்த்துக் கஞ்சி தயாரித்துப் பாலுடன் சாப்பிட, மாதவிடாயைச் சீராக ஏற்படுத்தித் தரும் ஹார்மோன் சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். இதன்மூலமாக, உங்களுடைய ச்ண்க்ஷழ்ர்ண்க் பிரச்னையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

 பப்பாளிக் காயைத் தோல் சீவி சமைத்து உண்பதாலும் மாதவிடாய்த் தாமதத்தைப் போக்கலாம். கறுப்பு எள்ளை லேசாக வறுத்துப் பொடி செய்து, 1-2 ஸ்பூன் அளவில் எடுத்து, சூடான சாதத்துடன் கலந்து, நல்லெண்ணெய்விட்டுப் பிசைந்து காலையில் உணவாக ஏற்க, உங்களுக்கு இரு நன்மைகள் கிடைக்கும். ஒன்று கருப்பை வலுப்பெற்று மாதவிடாய் சீராகுதல், இரண்டாவது கருப்பையில் ஏற்பட்டுள்ள ச்ண்க்ஷழ்ர்ண்க் சுருங்குதலுமாகும். கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறையும் கடுகு மற்றும் சீரகம் போன்றவற்றைத் தாளிக்க நீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தவும். வயிற்றின் மீது வெளிப்பூச்சாகவும் கடுகெண்ணெயை வெதுவெதுப்பாகப் பூசி, காலையில் வெந்நீரில் குளித்துவர, உங்கள் உபாதை விரைவில் தீருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 சுரைக்காய் கூட்டு,வாழைப் பூ வடைகறி, நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி போன்றவை சாப்பிட உகந்தவை. ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு நல்ல பலனைத் தருபவையாக இருக்கும். அசோகாரிஷ்டம் மற்றும் புனர்நவாஸவம் எனும் மருந்துகளை வகைக்கு 15 மிலி வீதம் கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு சுமார் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

 செய்யக் கூடாத செயல்களில் இரு சக்கர வாகனத்தில் குண்டும் குழியுமான பாதைகளில் பயணம் செய்தல், பேருந்தின் கடைசி இருக்கையில் உட்கார்ந்தோ, அதன் அருகே நின்று கொண்டோ பயணம் செய்தல், மாதவிடாய் நாட்களில் தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தல், சமையல் செய்தல், கடுஞ்சொற்களைப் பயன்படுத்துதல், அதிகக் கோபப்படுதல், துக்கப்படுதல், மாதவிடாய்த் திரவம் அதிகம் தங்கும்படியான துணிகளை நீண்ட நேரம் களையாது அணிந்திருத்தல் போன்றவை முக்கியமானவை.

 உடல் சூட்டை அதிகரிக்கும் பட்டை, சோம்பு, கரம் மசாலா, புளித்த ஊறுகாய், உப்பு, தயிர், மீன், சிக்கன் வகையறா போன்றவற்றைத் தவிர்க்கவும். மனதில் பயம் தரும் விஷயங்களை அலுவலகத்திலும் வீட்டிலும் தவிர்த்து, மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்படியான சூழ்நிலையை வளர்த்துக் கொள்வது நல்லது.

 அடிக்கடி நஸ்ரீஹய் செய்து கருப்பைக் கட்டியின் நிலை என்ன என்று பார்ப்பது தவறாகும். மாதவிடாய் நின்றுவிட்டால் கருப்பைக் கட்டிகள் பல பெண்களுக்கும் தானாகவே சுருங்கிவிடும். அதனால் முன் குறிப்பிட்ட செயல்முறைகளைக் கடைப்பிடித்தால் உங்கள் பிரச்னைக்கான தீர்வு விரைவில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதை முடிந்த வரை தவிர்க்கவும். இரவில் படுத்துறங்கும்போது மல்லாந்தநிலையிலோ, இடது பக்கம் சரிந்தோ படுக்கவும். மாதவிடாய் நாட்களில் குளிர்ந்த தரையிலோ, செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட அறையிலோ படுத்துறங்குவதைத் தவிர்க்கவும்.

 (தொடரும்)

 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

 செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com