

குழந்தைகள் விஷயத்தில் நடக்கும் இன்னொரு கொடுமை டழ்ர்ள்ற்ர்ஞ்ப்ஹய்க்ண்ய் மருந்துகளைப் பயன்படுத்துவது. பிரசவ தேதி கடந்தும் கூட குழந்தை இயல்பாகப் பிறக்காவிட்டால் பிரசவ வலி எடுக்க வைக்க இந்த மருந்து பயன்படுகிறது. டாக்டர்கள் இந்த மருந்தைச் செலுத்தி கருப்பையைச் சுருங்க வைத்து பிரசவம் பார்ப்பார்கள்.
நாள், நட்சத்திரம் பார்ப்பவர்களுக்கும் இந்த மருந்து கண்கண்ட தெய்வமாகிவிட்டது. ""டாக்டர்! எனக்கு இயல்பான பிரசவ தேதி இன்னும் ரெண்டு வாரம் இருக்கு. ஆனா அன்னைக்கு நாள் நல்லாயில்லை. நாளைக்கு நல்ல நாள். நட்சத்திரமும் நல்லா இருக்கு. பிரசவத்தை நாளைக்கு வச்சுக்கிட்டா குழந்தையோட எதிர்காலம் சிறப்பா இருக்கும். எனக்கு ஊசி போட்டு நாளைக்கே குழந்தையைப் பிறக்க வச்சிருங்களேன்''-இப்படி இப்போது நிறைய பேர் கேட்கிறார்கள்.
இயல்பான பிரசவத்திற்கு 4 அல்லது 6 வாரம் முன்னால் கூட செயற்கை பிரசவத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தையை இயல்பாக முழுமையாக கருப்பையில் வளர விடுவதில்லை! நல்ல நட்சத்திரத்தில் நல்ல நாளில் வெளியே எடுத்துவிட்டால் போதும். அப்புறம் இன்குபேட்டரில் வைத்துக்கூட வளர்த்துக் கொள்ளலாம் என்று இவர்களுக்கு நினைப்பு!
குழந்தையை இப்படி அரைகுறையாக வெளியே எடுப்பது மிக ஆபத்தான விஷயம். கருப்பையில் அது இருக்கும் கடைசி நாட்களில்தான் குழந்தையின் நுரையீரல், கண் போன்ற முக்கியமான உறுப்புகள் முழு வளர்ச்சியை எட்டுகின்றன. இன்குபேட்டரில் அவை இயல்பான வளர்ச்சியைப் பெறுவதில்லை. தாயின் கருப்பையைவிட செயற்கை இன்குபேட்டர் சிறப்பானதல்ல!
தேதி, நேரம் குறித்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வோர் நமது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமற்ற பாதுகாப்பற்றதாக ஆக்குகிறோம் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை உணர்வதே இல்லை!
"போஸ்ட் மார்ட்டம்' என்ற நூலில் டாக்டர் கே.ஆர்.சேதுராமன்.
பொதுவாக மொட்டைத் தலையுடன் பழனியாண்டி சித்திரிக்கப்படுகிறார். ஆனால் பழனியில் மூல விக்கிரகம் பின்பக்கம் கூர்முடிஇருப்பது அபிஷேக காலத்தில் காணப்படும் உண்மை. அவர்தம் திருமுடியின் பின்புறம் சிகை உண்டு. (பெண்ணின் பிச்சோடா போல் கொண்டை வடிவம்) சிகை-குடுமி-இளங்குடுமி-பிரம்மசரிய இலக்கணமாகும். இவ்வாறே அவர் திருக்கை தாங்கிய தண்டமும் பிரம்மசரிய ஆசிரமத்திற்குரிய ஞானதண்டம் ஆகும். இல்லறத்துக்கு முந்திய பிரம்மசரிய திருக்கோலம் தாங்கி எழில் முருகன் அருளமுதம் வழங்கும் தலம் பழனி.
பழனி ஆண்டவர் துறவுக் கோலத்தில் இருப்பவர். அவரை வீட்டில் வைத்து வணங்கினால் நம்மையும் ஆண்டியாக்கிவிடுவார் என்று சிலர் அறியாது பேசுவார்கள். பழனி முருகன் உண்மையில் மொட்டை ஆண்டி அல்லன்! குடுமியுடன் கூடிய சடையாண்டியாம்! அவர் புனைந்திருக்கும் கோலமும் துறவுக்கோலமும் அன்று.
காஷாயமும் யோகதண்டமும் முடியை முண்டிதம் செய்வது துறவிகளுக்குரியவை. சிறு குழந்தைக்கு எல்லா வேடமும் போட்டு மகிழும் தாய் அக்குழந்தைக்குத் தன் தாய்மை வேடத்தையும் போட்டு மகிழ்வதைப் போலவே, முனிவர்கள் தம்மைப் போல துறவியாக்கி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆகவே, புது வகையான கோலத்தை ஆண்டவருக்குச் சூட்டிவிட்டார்கள். தாம் வணங்கும் தெய்வத்தின் பாவனை, உருவம், குணம் முதலியனவற்றை வணங்கும் தனக்கும் அவ்வியல்பு ஏற்படும் என்பதே உண்மை! இறைவனின் குணமே எதுவென்றால் நினைத்தவர்கள் நினைத்த வண்ணம் காட்சி தருவதே ஆகும். கோவணத்துடன் காட்சி நல்கும் பழனி ஆண்டவர் திருவடிவம் உலக பசு, பாச தொந்தமதுவான உறவு, தாயார், தந்தை, மனைவி, பாலர் என்பவற்றினால் மதிநிலை கெடாமல் பற்றற்ற பெருநிலையாகிய உள்ளத் துறவைக் கருத்திற் கொண்டு வாழ வேண்டும் என்ற தத்துவத்தைக் காட்டும் அரியதோர் வடிவமாகும்.
நான் இந்திய ராணுவத்தில் 31 ஆண்டுகள் பணிபுரிந்து அதில் வடக்கே கார்கில், அதற்கு மேலும் உள்ள போலன்பாஸ் (கஹக்க்ஹந்) முதல் தெற்கே கன்னியாகுமரி முனைவரையும், மேற்கே பஞ்சாப், அமிர்தசரஸ் அடுத்த வாஹா எல்லை முதல் கிழக்கு சஉஊஅ என்று அழைக்கப்படும் இடங்களும் மற்றும் மணிப்பூரை அடுத்த பர்மா எல்லை வரை சென்று என் ராணுவப் பணிகளைச் செய்துள்ளேன். அப்போது நான் பார்த்த அயோத்தி (பைசாபாத்) ராமர் கோயில் பக்கத்திலேயே பாபர் மசூதி இருந்தது. அதே போல் கிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவில் கிருஷ்ணர் அவதரித்த (பாதாள ஜெயில்) தலத்தை ஒட்டிய பெரிய மசூதி இன்றும் இடிக்காமல் இருக்கிறது. நம் புண்ணிய தலமான காசி (வாரணாசி)யில் விஸ்வநாத ஆலயத்தை ஒட்டியே பெரிய மசூதியை இன்றளவும் பார்க்க முடிகிறது. அப்போது அங்குள்ள மக்கள் (இந்து, முஸ்லீம்கள்) அவர்களின் அன்றாட நேர்த்திகளைச் செலுத்திக்கொண்டு சுமூகமான முறையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் சங்கர மடத்திற்கு மிக அருகில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லீம் பெருமக்கள் அதிகாலை மற்றும் மாலையில் திரண்டு வந்து நமாஸ் ஓதிவிட்டுச் செல்வார்கள். அப்போது ஒலிபெருக்கி மூலம் "அல்லாஹு அக்பர்' என்று ஒலி எழுப்புவார்கள். இது பெரியவாள் அவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் என்று இதை முடக்க சங்கர மடம் முயற்சி செய்ததாம். இதைக் கேட்ட பெரியவாள், சங்கர மட நிர்வாகிகளிடம் மிகவும் கோபப்பட்டு, ""அவர்கள் மத சம்பிரதாயப்படி அவர்கள் நேர்த்திக்கடன் செய்கிறார்கள். அதைத் தடுக்க நாம் யார்? இந்த மாதிரியான அநாகரீகமான வேலைகளில் ஈடுபடாதீர்கள்'' என்று அறிவுரை வழங்கியதாகச் சொல்வார்கள்.
அப்படி சுமூகமாக இருந்த நம் நாட்டில் இன்று ஏன் இந்த அவல நிலை?
("தாய் மண்ணே வணக்கம்' என்ற நூலில் கேப்டன் டி.வி. நரசிம்மன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.