

சென்னையில் அச்சுத் தொழிலாளர் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட கம்பாசிட்டரும் சிலம்புச் செல்வருமான ம.பொ.சிவஞானம் சொன்னது:
""என் காலத்தில் அச்சுத் தொழிலில் இன்றுள்ள வசதிகள் கிடையாது. மை மூடியிருக்கும் ஈய எழுத்துக்களை அச்சுக் கோர்க்கும்போது கைகளில் ஒட்டிக் கொள்ளும் மையைக் கழுவுவதற்கு சோப்பு தரமாட்டார்கள். அந்த மை வாய் வழியாக வயிற்றுக்குள் புகுந்து தொழிலாளர்களுக்குப் பலவிதமான நோய்களை உண்டாக்கும்.
""எனக்கு வயிற்றுப் புண் வந்தது. எங்களுக்கு எந்தவிதமான மருத்துவ வசதிகளும் கிடையாது. தொழில் நிரந்தம் கிடையாது. இது விஷயமாக இந்த மாநாட்டில் ஒரு முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.