திரைக்கதிர்

தமிழில் விஷாலுடன் "சமர்', ஜெயம் ரவியுடன் "பூலோகம்', ஜீவாவுடன் "என்றென்றும் புன்னகை' ஆகிய
திரைக்கதிர்

தமிழில் விஷாலுடன் "சமர்', ஜெயம் ரவியுடன் "பூலோகம்', ஜீவாவுடன் "என்றென்றும் புன்னகை' ஆகிய படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் திருமணமாகி செட்டில் ஆகப் போகிறார். அதனால்தான் மார்க்கெட் இருக்கும்போதே மொத்தமாக அட்வான்ûஸ வாங்கிப் போட்டு பணம் பார்த்துவிட நினைக்கிறார் என வரும் தகவல்கள் பற்றி த்ரிஷாவிடம் கேட்டால்... ""கல்யாண கதையைக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. கடந்த 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டும் இது முடியாது. நான் நடித்த சில படங்கள் தோல்வியடைந்திருந்தாலும் அவற்றில் எனது கதாபாத்திரம் பேசப்பட்டது. இப்போது நான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் எனது கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. அதனால் சம்பளத்தைக் கூட நான் குறைத்துக்கொண்டேன். மற்றபடி பணம் சம்பாதிப்பதற்காகவோ, படங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவோ நடிப்பது என் நோக்கமல்ல'' என்கிறார்.

காஜல் அகர்வாலுக்கு சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் ஆதரவு குவிந்துகொண்டே வருகிறது. இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டி விட்டதால் உற்சாகத்தில் இருக்கிறார். இதுவரை எந்தவொரு தென்னிந்திய நடிகைக்கும் இந்த அளவுக்கு பேஸ்புக்கில் ஆதரவு குவிந்தது இல்லை என கூறும் காஜல் அகர்வால் ரசிகர்களையும், என்னையும் இணைக்கும் பாலமாக ஃபேஸ்புக் திகழ்கிறது என ஃபேஸ்புக் புகழ்பாடுகிறார்.

மேலும் ""என்னுடைய படம், நடிப்பு, உடைகள், பலம், பலவீனம் ஆகியவற்றை ஃபேஸ்புக் வாயிலாக ரசிகர்கள் உடனுக்குடன் தெரிவிக்கின்றனர். இதனால் அடுத்த படத்தில் நடிக்கும் போது முந்தைய படத்தில் இருந்த குறைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு எல்லாமே ஃபேஸ்புக்தான்'' என்கிறார் காஜல்.

ரஜினியின்  பிறந்த நாளையொட்டி வெளியிட ராகவா லாரன்ஸ் ஒரு வித்தியாசமான இசை ஆல்பத்தைத் தயாரிக்கிறார். இதற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆல்பத்தில் ரஜினியின் சூப்பர் ஹிட் படக் காட்சிகளுடன் லாரன்ஸின் நடனமும் இடம்பெறுகிறது.

அண்மையில் நடைபெற்ற "ஹரிதாஸ்' படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படத்தின் நாயகி சிநேகா, ""இந்த படத்தில் நடிக்கணும்னு என்னை அழைச்சப்போ நான் தயங்கினேன். எனக்கு கல்யாணம் ஆகப்போகுது சார்னு சொன்னேன். அதுக்கென்ன... பரவாயில்ல. நீங்கதான் நடிக்கணும்னு சொன்னார் டைரக்டர் குமரவேலன். அதுவே எனக்கு ஆச்சர்யமா இருந்திச்சு. ஏன்னா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆயிட்டா அப்புறம் அவங்களுக்குன்னு சில கேரக்டர்கள் வச்சுருப்பாங்க இங்க. மறுபடியும் ஹீரோயினா நடிக்கவே விட மாட்டாங்க. ஆனால் அதுபற்றியெல்லாம் அவர் நினைக்கவே இல்லை. என் டைமுக்காகக் காத்திருந்து பல காட்சிகளைப் படமாக்கினார். என் கேரியரில் மிக முக்கியமான படம் இது. ஒரு சிறந்த ஆர்ட் பிலிமுக்குரிய கதையை கமர்ஷியல் பிலிமாக்கியிருக்கிறார் டைரக்டர். இப்படிப்பட்ட டைரக்டர்கள்தான் இந்தக் காலகட்டத்துக்குத் தேவை'' என்று படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனைப் புகழ்ந்து தள்ளினார்.

"கடல்' படத்தின் படப்பிடிப்பை ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடத்தி வந்தார் மணிரத்னம். படப்பிடிப்பைப் பார்க்க தினமும் கூட்டம் கூடிவிட்டதால் மிகுந்த சிரமத்துக்குள்ளான மணி, புரொடக்ஷன் மேனேஜரை அழைத்து "படப்பிடிப்பு முடியும் வரை தினமும் ரூ.200 தருகிறோம்; காலை முதல் மாலை வரை படப்பிடிப்பு பகுதிகளுக்கு யாரும் வரக் கூடாது என கேட்டுக்கொள்ளுங்கள்' என கூறியிருக்கிறார். அந்த ஐடியா, பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிறகென்ன... பணத்தை வாங்கிக்கொண்டு மணிரத்னத்தை வாழ்த்திவிட்டு சொன்ன சொல்லைக் காப்பாற்றியிருக்கிறார்கள் கிராமத்தினர்.

"என்னவளே', "ஜுனியர் சீனியர்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஜே.சுரேஷ், தற்போது இயக்கி,  இசையமைத்து, ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் "பாரசீக மன்னன்'. படத்தின் நாயகிக்காக வழக்கம்போல அவரும் கேரளத்தை முற்றுகையிட்டு நடிகை ஸ்ருதி லட்சுமியைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் அவரோ ""தமிழ்நாட்டுக்காரங்க எல்லாரும் எங்க ஊர் ஹீரோயின்களை கிளாமராகத்தான் காட்ட நினைக்கிறீர்கள்; நடிக்க வாய்ப்பே தருவதில்லை; எனக்கு அது சரிப்படாது'' என்று கூறியிருக்கிறார். "உங்களை ஒரு காட்சியில் கூட கிளாமராக நடிக்க வைக்க மாட்டேன்'' என்று உறுதியளித்து அதன்படியே படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் இசையமைக்கும் இயக்குநர் சுரேஷுக்கு அவரது பால்ய கால நண்பரான யுவன்ஷங்கர் ராஜா பல "டிப்ஸ்'களைக் கூறி உதவியதால் டைட்டிலில் பாடல் வெளியீட்டு அழைப்பிதழில் "இசை ஆலோசனை - யுவன்ஷங்கர் ராஜா' என மரியாதை செலுத்தியிருந்தார் இயக்குநர்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியான "கர்ணன்' படம், பாக்ஸ் ஆபிஸில் ரிகார்ட் செய்ததையடுத்து சிவாஜிகணேசனின் ஹிட் படங்கள் வரிசையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளன. அவற்றுள் முதலாவதாக வெளிவரவிருப்பது காதலையும் அதைவிட சோகத்தையும் கசக்கிப் பிழிந்து சூப்பர் ஹிட் ஆன "வசந்த மாளிகை'. வரும் டிச.7-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம், இன்றைய ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இணையாக வியாபாரம் ஆகியுள்ளது.

பார்த்திபன், விமல், விதார்த் ஆகியோரை வைத்து "ஜன்னல் ஓரம்' என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். "வழக்கு எண் 18/9' பட நாயகி மனீஷா, பூர்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com