திரைக்கதிர்

மீடியாக்களில் தன் பேட்டிகள் வருவதை நடிகர் கவுண்டமணி தவிர்த்து வந்தாலும், தான் பழகிய பழைய மீடியா ஆள்களிடம் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறார். என்ன படம் ரிலீஸ்? யார் ஹீரோ? என்ன கதை? என்றெல்லாம் விசாரித்
திரைக்கதிர்
Updated on
2 min read

மீடியாக்களில் தன் பேட்டிகள் வருவதை நடிகர் கவுண்டமணி தவிர்த்து வந்தாலும், தான் பழகிய பழைய மீடியா ஆள்களிடம் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறார். என்ன படம் ரிலீஸ்? யார் ஹீரோ? என்ன கதை? என்றெல்லாம் விசாரித்து விட்டு, அந்த நேரத்துக்கான டைமிங் காமெடி ஒன்றை தட்டி விட்டு சிரிப்பாராம் கவுண்டமணி.

வீட்டிலிருந்து தன் அறைக்கு 13 மாடிப் படிகளை கடந்து செல்ல வேண்டும் திரிஷா. இந்த 13 மாடிப் படிகளுக்கும் தலா ரூ. 2 லட்சம் என விலையுயர்ந்த மார்பிள் கற்களை கொண்டு சமீபத்தில் அலங்காரப்படுத்தி இருக்கிறார். அதே போல் அறைக்குள்ளும் பல லட்சம் மதிப்பிலான வேலைப்பாடுகள் நிறைந்த மார்பிள் கற்களை பதித்திருக்கிறார்.

பள்ளி பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாக சென்னைக்கு அழைத்து சமீபத்தில் சன்மானம் வழங்கியிருக்கிறார் நடிகர் விஜய். வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை பெரிய அளவில் கொண்டு வரவும் திட்டம் வைத்திருக்கிறாராம். இதற்கிடையில் மறைந்த தன் தங்கையின் பெயரில் இலவச கல்விச் சேவையை தொடங்கினால் எப்படியிருக்கும்? என தன் சகாக்களிடம் கேட்டு இருக்கிறாராம்.

போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு சாலையோர இட்லி கடையில் சாப்பிடுவதை இப்போதும் பின்பற்றி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். உடல் நலக்குறைவால் சில காலமாக அங்கு செல்வதைத் தவிர்த்த அவர், மீண்டும் அந்த கடைக்கு விஜயம் செய்ய ஆரம்பித்து விட்டார். குறிப்பிட்ட இட்லி கடையில் பழைய அம்பாசிடர் கார் ஒன்று நின்று கொண்டிருந்தால் உள்ளே ரஜினி இருக்கிறார் என்று அர்த்தம்.

தன் வீட்டில் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஜெர்மன் கார் ரேஸர் ஆல்க்ஷாவின் புகைப்படத்தின் முன் தினமும் காலை வேளைகளில் மனம் உருகி நிற்பார் நடிகர் அஜித். தனக்கு கார் ரேஸிங் மீது ஆர்வம் வர அவர்தான் காரணம் என்பார். தான் பயன்படுத்தும் எல்லா கார்களிலும் ஆல்க்ஷாவின் போட்டோ இருக்குமாறு பார்த்துக் கொள்வார்.

தான் உடுத்தும் ஆடைகள், கண்ணாடி எல்லாவற்றையும் கறுப்பு நிறத்திலேயே அணிய ஆசைப்படுவார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும் என அதற்கு காரணமும் சொல்லுவார். தன்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சென்னை மாநகர சாலைகளில் வலம் வருவதில் அதிக ஆர்வம் காட்டுவார். கறுப்பு நிற உடையில், கறுப்பு ஹெல்மெட் அணிந்து உங்கள் அருகில் சென்றுக் கொண்டிருப்பவர் பி.சி.ஸ்ரீராமாகக் கூட இருக்கலாம்.

புகைப்பட கலைஞராக பிரபல பத்திரிகைகளுக்கு தான் எடுத்த புகைப்படங்களை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த். அவ்வப்போது ஒவ்வொரு புகைப்படமாக எடுத்துக் காட்டி அப்புகைப்படம் எடுக்கும் போது நேர்ந்த சம்பவங்களை ஆர்வமாக விவரிப்பார். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை தான் எடுத்த ஒரு புகைப்படம் இன்னும் பிரபலம் என மகிழ்ச்சி கொள்வார்.

எம்மதமும் சம்மதம் என்பதை விளக்கும் வகையில் டி.ராஜேந்தர் எடுத்திருக்கும் புதிய புகைப்படம் அவர் அலுவலகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. இந்துவாக, இஸ்லாமியராக, கிறிஸ்துவராக வேடம் அணிந்து அப்புகைப்படத்தை தயாரித்திருக்கிறார். ஏன் திடீரென்று இந்த முடிவு என்றால், ஜாதி, மதங்களை துறந்தவன் இந்த டி.ஆரு. என்பார் தன் பாணியில்.

முட்டுக்காடு பகுதியில் பிரம்மாண்ட பங்களா கட்டி குடியேறி விட்ட சிம்ரன், அந்த பகுதியில் உள்ள பள்ளிகளிலேயே தன் இரு மகன்களையும் படிக்க வைத்திருக்கிறார். தன் வீட்டில் இருந்து சிறிது தூரமே இருக்கும் அந்த பள்ளிக்கு நடந்தே சென்று தன் மகன்களை விட்டு வருகிறார். காலை மற்றும் மாலை வேளைகளில் சிம்ரனை பார்ப்பதற்கென்றே அங்கு ஒரு கூட்டம் கூடி விடுகிறது.

அதிகாலைகளில் சாலிகிராமத்து தெருக்களில் வாக்கிங் செல்வதை தவறாமல் கடைப்பிடித்து வருகிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பிரபல இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என ஒரு பட்டாளமே வாக்கிங் செல்லும் அந்த பொழுதில், அவர் ஆசையாகப் பேசுவது பத்திரிகையாளர்களிடம் மட்டுமே.

திருவண்ணாமலை பயணங்களின் போது ரொம்பவே மகிழ்ச்சியாக காணப்படுவார் இளையராஜா. சாலையோர சிறுவர்களை கண்டால் காரை நிறுத்தச் சொல்லி தன் கேமிராவில் அவர்களை ஷூட் செய்வார். பின்னர் அவர்களின் விலாசங்களைப் பெற்று அவர்களுக்கே புகைப்படங்களை அனுப்பி வைத்து மகிழ்வார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் உதவி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார் நயன்தாரா. ""உதவி இயக்குநராக ஆசை'' என விஷ்ணுவிடம் தன் ஆசையை நயன் தெரிவிக்க, நடிப்பு நேரம் போக காட்சி அமைப்பு, கதை விவாதம் எல்லாவற்றிலும் கலந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறாம் விஷ்ணு.

"அந்தி மழை பொழிகிறது.... ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....' என்ற பாடல்தான் நடிகர் கமல்ஹாசனுக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடல். "ராஜபார்வை' படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில் வரும் "தாவணி விசிறிகள் வீசுகிறேன்' ...என்ற வரியை இப்போதும் கமல்ஹாசன் சிலாகித்துப் பேசுவது உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com