சீனத் தேர்தலில் புரட்சியை ஏற்படுத்திய பெண்!
கடந்த டிசம்பர் மாதம் வரை ஸþ ஜியான்வான் சாதாரண பள்ளி ஆசிரியர்தான். ஆனால் இன்றோ இவரின் சொந்த கிராமத்தின் கமிட்டியில் துணை இயக்குநராகும் நிலையில் இருக்கிறார். சீனாவிலுள்ள வூகன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸþ


கடந்த டிசம்பர் மாதம் வரை ஸþ ஜியான்வான் சாதாரண பள்ளி ஆசிரியர்தான். ஆனால் இன்றோ இவரின் சொந்த கிராமத்தின் கமிட்டியில் துணை இயக்குநராகும் நிலையில் இருக்கிறார்.
சீனாவிலுள்ள வூகன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸþ ஜியான்வான். இவர் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியை, வயது 21. மீனவ கிராமமான அந்தக் கிராமத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த அவரின் தந்தையை (42) கடந்த டிசம்பர் மாதம் திடீரென்று போலீஸ் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட இரண்டு நாள் கழித்து, சிறைச்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் அவரின் தந்தை. மர்மமான மரணத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்கக் கூறி கம்யூனிஸ்ட் கட்சி கலவரத்தில் ஈடுபட்டது.
இதனால் பாதிப்படைந்த ஸþ தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். தேர்தலில் போட்டியிட்டு தந்தையின் இறப்பில் உள்ள மர்மத்தையும், உரிமைகளையும் மீட்டெடுக்க எண்ணினார்.
12 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை, கிராமத்து கமிட்டியின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு நபரும், அவரைச் சேர்ந்தவர்களுமே கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். அதாவது ஏழு பேர் கொண்ட கமிட்டி இது.
சீனாவிலுள்ள கிராமங்களில் தேர்தலைப் பொறுத்தவரை, வேட்பாளர்களை தீர்மானிப்பது அதிகாரிகள்தான். அவர்கள் யாரை நிறுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் ஓட்டளிக்க வேண்டும். இதுதான் நடைமுறையில் உள்ள விதி. பல சமயங்களில் அந்த ஒரே ஒரு நபரைத் தவிர வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள்.
ஆனால் ஸþ இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதுகுறித்து சீனாவின் இணையதளமான "வைபோ'வில் செய்தி வெளியானது. இது ட்விட்டர் போன்ற சீனமொழித்தளம். இதனைத் தொடர்ந்து பரபரப்புக்கு ஆளானார் ஸþ. ஆனால் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் தோன்றின.
""கிராமத்தில் உள்ள அரசாங்க அதிகாரிகள் நான் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்று கூறி தொந்தரவு செய்தனர். மேலும் நான் வேலை பார்த்த பள்ளியில் எனது ஒப்பந்தத்தை ரத்து செய்தனர். அதற்கு முன்பு என்னைப் பள்ளியில் ஒரு அறையில் அடைத்து வைத்து, சில அதிகாரிகள் இணையதளத்தின் மூலம் "சாட்' செய்து என்னை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கூறினார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் கிராமத்துக்குள் இருப்பதால் ஓரளவு பாதுகாப்போடு இருக்கிறேன். ஆனால் வேறு பகுதியில் இருக்கும் என் உறவினர்கள், தம்பி, தங்கை ஆகியோருக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் ஸþ வெற்றி பெறுவார் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. தேர்தலில் ஸþ வெற்றி பெற்றால் 7 பேர் கொண்ட கமிட்டியில், துணை இயக்குநர் பதவியை அலங்கரிப்பார் என்றும் எதிர்பார்க்கின்றனர். இளவயதிலேயே தேர்தலில் போட்டியிடும் இந்த பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...