திரைக்கதிர்

வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரஞ்சித், அட்டக்கத்தி படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து அஜீத்துக்கென கதை ஒன்றை உருவாக்கியுள்ளார் ரஞ்சித். கதை கேட்ட அஜீத் அசந்து போய்
திரைக்கதிர்
Updated on
2 min read

வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரஞ்சித், அட்டக்கத்தி படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து அஜீத்துக்கென கதை ஒன்றை உருவாக்கியுள்ளார் ரஞ்சித்.

கதை கேட்ட அஜீத் அசந்து போய் படத்தைத் தயாரிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். வயதான ஒருவரை மையமாக கொண்ட கதை அம்சம் என்பதால் படத்தில் நாயகனாக அஜித் நடிக்கவில்லையாம்.  ராஜ் கிரண் அந்த வயதான முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

இந்தியில் கோல்மால், அப்படத்தின் 2 பாகங்கள், சிங்ஹம் (தமிழ் சிங்கம்) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரோஹித் ஷெட்டி. தொடர்ந்து ரூ.100 கோடி வசூல் செய்யும் படங்களை இயக்கியதால் டாப் இயக்குநர்கள் வரிசையில் இருக்கிறார். அவர் அடுத்து இயக்கும் இந்தி படம் சென்னை எக்ஸ்பிரஸ். மும்பையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு புறப்படும் ரயிலில் பயணிக்கும் மும்பைவாசி ஷாருக்கானுக்கும் தமிழ் பெண் தீபிகா படுகோனுக்கும் காதல் பிறக்கிறது. ராமேஸ்வரம் சென்றதும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை வைத்து நகைச்சுவையுடன் படம் நகர்கிறது. படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்த ரோஹித் ஷெட்டி முடிவு செய்திருக்கிறார். இதனால் படத்தில் பெரும்பாலும் தமிழ் நடிகர்களையே நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். காமெடித்தனம் நிறைந்த டான் வேடம் படத்தில் இடம்பெறுகிறது. அது தீபிகாவின் அப்பா வேடம். அந்த வேடத்துக்கு சத்யராஜ் பொருத்தமாக இருப்பார் என்று அவரது நண்பர்கள் சிபாரிசு செய்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் சிங்கம்-2 படத்தில் முக்கிய நாயகியாக அனுஷ்காவும் இருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா. காரணம்... முதலில் இருவருக்கும் முக்கியத்துவம் உள்ளது என்று சொன்ன இயக்குநர், இப்போது அனுஷ்கா தான் முதன்மை நாயகி என கூறியிருக்கிறார். படத்தில் ஒப்பந்தம் ஆன போது என்னுடைய மார்க்கெட் வேறு; இப்போது என்னுடைய மார்க்கெட்டே வேறு. அதனால் எனக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் வேண்டும் என அடம் பிடித்து வருகிறார் ஹன்சிகா.

த்ரிஷாவிடம் தற்போது சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை என்று மூன்று தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. இதற்கிடையில் இந்தி இயக்குநர்கள் சிலர் த்ரிஷாவை அணுகி தங்கள் படங்களில் நடிக்க அழைத்தனர். இம்ரான் ஹஸ்மி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க அழைத்தனர்.

அவற்றின் கதைகளை கேட்ட த்ரிஷா அதிர்ந்துவிட்டாராம். எல்லா படங்களிலும் தனது கதாபாத்திரத்தை மிக கவர்ச்சியாக உருவாக்கியிருந்ததே காரணம். முத்தக்காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்றார்கள். எனவே அப்படங்களில் நடிக்க த்ரிஷா மறுத்து விட்டார். விரைவில் திருமணம் என்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கையாம்.

சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த ஒரே காரணத்துக்காக இவரை டோக்கியோவுக்கு அழைத்தார்களாம் அங்குள்ள ரஜினி ரசிகர்கள். இந்த அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்ட ஸ்ரேயா, பெட்டி, படுக்கைகளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். போன இடத்தில் தடபுடலான வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அங்குள்ள பாரம்பரிய முறைப்படி இவருக்கு வரவேற்பளித்த ஜப்பானியர்கள், ரெட் கார்ப்பெட் பாதையில் ரிக்ஷாவில் ஏற்றி அழைத்துச் சென்றார்களாம்.

இளையராஜா, வைரமுத்து வாரிசுகளான யுவன் சங்கர் ராஜாவும், கபிலனும் ஒரு காலத்தில் ஓடிப்பிடித்து விளையாடுகிற பிரண்ட்ஸ். காலம் அப்பாக்களை பிரித்துவிட்டது. ஆனால்  திடீரென்று யுவனுக்கு கபிலன் போன் செய்ய, ""வா... சான்ஸ் தர்றேன்'' என்று யுவன் சொல்ல, ஹிட் ஸாங் ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. அஜீத் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்காக கை கோர்த்திருக்கிறார்கள் வாரிசுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com