மருந்தாகும் பூண்டு

 பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.
மருந்தாகும் பூண்டு

 பூண்டை பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும்.

 நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

 பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.

 ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கெண்டால் வாதநோய் கட்டுப்படும்.

 பூண்டுச் சாறுடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்

படும்.

 பூண்டை சிறிதளவு நீர் கலந்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் இருமல்  கட்டுப்படும்.

 பூண்டை நசுக்கி ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உருவாகும் கால் வீக்கம் குறையும். ரத்தக் கொதிப்பும் கட்டுப்படும்.

 பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம் சூட்டில் மைபோல் அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால் தொண்டை வீக்கம் குறையும்.

 உணவில் மருந்தாக உபயோகப்படுவது பூண்டு. பல மருத்துவ குணம் உள்ளடங்கியது என்பதால் தினசரி உணவில் பூண்டை அனைவரும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com