
இன்று வேட்பாளர் சொத்துக்கணக்கில் பணம், நிலம், கார் தவிர அசையும்- அசையா சொத்துக்களை மட்டும் குறிப்பிடுவதாக நினைத்து விடாதீர்கள். வேட்பாளர்களில் பலர்... பசுக்களையும், துப்பாக்கிகளையும், அழகிய ஓவியங்களையும், கெடிகாரங்களையும், தங்கள் சொத்தாக இந்தமுறை காட்டியுள்ளனர்! அப்படி காட்டப்பட்டுள்ளவற்றில் சிலவற்றை இப்போது காணலாம்:
முன்னாள் பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் தன்னுடைய சொத்துக்களில் பசுக்களையும் எருமைகளையும் காட்டியுள்ளார்! இந்த முறை அவர் தேர்தலில் நிற்கவில்லை! மாறாக அவர் மனைவி ராபிரி தேவி... தேர்தலில் நிற்கிறார். அவர் தன்னுடைய சொத்தில் 45 பசுக்கள் 20 கன்றுக்குட்டிகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 19 லட்சம் என காட்டியுள்ளார்!
பி.ஜே.பி.யிலிருந்து வெளியேற்றப்பட்டு, இன்று ராஜஸ்தான் பார்மர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜஸ்வந்த்சிங்கிற்கு குதிரைகள் மீது அபார மோகம் உண்டு. இவர் காட்டியுள்ள கணக்கில் தன்னிடம் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள அரபு குதிரைகள் உள்ளதாக காட்டியுள்ளார். இது தவிர ரூபாய் 3 லட்சம் மதிப்புக் கொண்ட அதிக பால் தரும் தார்பார்கர் பசுக்கள் உள்ளதாகவும் காட்டியுள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித்தின் மகன் ஷந்தீப் தீட்சித்துக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அபார ஈடுபாடு உண்டு. கிழக்கு டெல்லி எம்.பியான இவர், தனக்கு ரூபாய் 38 லட்சம் அளவுக்கு மிருகங்கள் சார்ந்த சொத்து உள்ளதாக கூறியுள்ளார்.
ஹரியானா பிவானி மகேந்திர காக் பகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேத்பிராகாஷ் பாரடியா என்பவர் இரு பரீட்சார்த்த திரைப்படங்களை எடுத்து வருகிறார். இவற்றின் மதிப்பு சுமார் 15 லட்சம். இது இன்னமும் மார்க்கெட்டில் விலை பேசப்படவில்லை. ஆக அவை என் சொத்தில் அடங்கும் என்றும் அவற்றை காட்டியுள்ளார் வேத் பிரகாஷ்.
மத்தியப்பிரதேசம் சிதியின் காங்கிரஸ் வேட்பாளர் இந்திரஜித் குமார். தன்னுடைய சொத்துக்களில் டீயூப்வெல், கைப்பம்புகளை காட்டியுள்ளார்.
அஸ்ஸôம் திப்ருகர்}திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தன்னிடம் இரண்டு பெரிய ஜெ.சி.பி. கிரேன்கள் உள்ளன என்றும் அவற்றின் மதிப்பு 43 லட்சம் என காட்டியுள்ளார்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் சார்ந்த பார்வேட் ப்ளாக் வேட்பாளர், ஏ.எஸ்.பாண்டியன் தன்னிடம் ரூபாய் 1.5 லட்சத்துக்கு கட்டிட மெஷின்கள் மற்றும் அவை சார்ந்த கருவிகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
தெற்கு கோவாவின் சர்ச்சில் அலிமாவோ திரிணாமுல் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இவர் தன்னிடம் அசோக் லேலண்ட் நிறுவன மீன்பிடி படகுகள் (ரூபாய் 7லட்சம்); வலைகள் மற்றும் உபகரணங்கள் ரூபாய் 4 லட்சத்துக்கு உள்ளன என காட்டியுள்ளார்.
வேறு சிலரோ தங்கள் பணத்தை, வித்தியாசமாய் போட்டு வைத்திருந்து அதனையும் தங்கள் சொத்தாகக் காட்டியுள்ளனர் குறிப்பாக,
ஹசாரிபாக் பி.ஜே.பி. வேட்பாளர் (யஷ்வந்த் சின்காவின் மகன்) ஜயந்த சின்கா... தன்னிடம் 24 லட்சம் ரூபாய் மதிப்புக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளன என காட்டியுள்ளார். இவர் முன்பு அமெரிக்காவில் தொழில் செய்தபோது அவரும், அவரது மனைவியும் இணைந்து ஏராளமான கலைப் பொருட்களை சேகரித்தனர். இவை 20 ஆண்டுகளில் சேமிக்கப் பட்டவையாம்!.
ஓவியங்களில் பிரபல ஓவியர் ஹுசைன் மற்றும் ராடியா... சவுகா ஆகியோரின் ஓவியங்களும் அடக்கம். இன்று மதிப்பு மேலும் பல மடங்கு கூடும்.
ஒரிசாவின் கந்தமால் பகுதியில் போட்டியிடும் பிஜுஜனதாதள வேட்பாளர் ஹேமேந்திரசிங், தன்னிடம் ரூபாய் 25 லட்சத்துக்கு கெடிகாரங்கள் உள்ளன. மேலும் ரூபாய் 7 லட்சம் பெருமானமுள்ள ரோலக்ஸ் வாட்சுகள், ரூபாய் 1.5 லட்சம் மதிப்பு கொண்ட டாக்ஹுவர் (பஹஞ் ஏங்ஜ்ங்ழ்) ஆகியவையும் உள்ளன என காட்டியுள்ளார்.
தெற்கு கோவாவின் சாலோம் மாத்யூ பிரான்சிஸ்கோ சர்தின், ஒரு சுயேட்சை வேட்பாளர். இவருடைய தேர்தல் சின்னம் பேனா நிப்பு! இவர் பேனாக்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்டவர்! தன்னிடம் கார்டியர், மான்ட் ப்ளாங்க், எ.டி.டியூபான்ட் போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய 38 பேனாக்கள் (பெரும்பாலானவை கையினால் செய்யப்பட்டவை) உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றின் மதிப்பு 5 லட்சத்திற்கு அதிகம் எனவும் காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.