துணிகளைப் பராமரிக்க...

பட்டுப் புடவைகளைத் துவைத்து அலசும்போது சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் அதிகம் சாயம் போகாது, மங்காது, பார்க்க பளிச்சிடும்.
துணிகளைப் பராமரிக்க...

பட்டுப் புடவைகளைத் துவைத்து அலசும்போது சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் அதிகம் சாயம் போகாது, மங்காது, பார்க்க பளிச்சிடும்.

* பட்டுப்புடவைகளை இரும்பு பீரோவைவிட மர பீரோவில் வைத்தால் புதியதுபோல பல வருடங்கள் இருக்கும்.

* துண்டுகள், வேஷ்டிகள் போன்றவற்றை ஓரம் அடித்துவிட்டுப் பயன்படுத்தினால் நீண்ட நாள்களுக்கு வரும் என்பதோடு சீக்கிரம் பழசும் ஆகாது.

* புதுத் துணிகளையோ, பட்டுப் புடவைகளையோ முதல்முறை நீரில் நனைக்கும்போது ஒரு ஸ்பூன் உப்பு கலந்த நீரில் நனைத்தால் சாயம் போகாது.

* பட்டுப் புடவையில் படிந்த எண்ணெய் கறையைப் போக்க கொஞ்சம் ஷாம்பூ போட்டு அலசினால் போதும்.

* தண்ணீரில் சிறிது கிளிசரினைக் கலந்து துவைத்த பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால் அதிகம் சுருங்காமல் இழைகள் விலகாமல்

இருக்கும்.

* பட்டுப் புடவைகளைத் தண்ணீரில் நனைப்பதை விட ட்ரைவாஷ் செய்வதே நல்லது.

* நிறைய ஜரிகை உள்ள பட்டுப்புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும் வாய்ப்பு உண்டு.

* படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், பெரிய துண்டு போன்றவற்றை மிதமான சுடுநீரில் முக்கால் பாகம் வாஷிங் சோடாவும் கால் பாகம் சோப் பவுடரும் போட்டு ஊறவைத்துத் துவைத்தோமானால் துணிகள் பளிச்சென்றிருக்கும். சோப்பு செலவும் குறையும். துணிகளும் சாயம் போகாது.

* துவண்டு போயிருக்கும் பிரிண்டெட் பட்டுப் புடவைகளுக்கு புத்துயிர் ஊட்ட அரை பக்கெட் குளிர்ந்த நீரில் ஒரு டீ ஸ்பூன் சாதாரண கோந்து சேர்த்துக் கலக்கவும். துவைத்த புடவையை இந்த நீரில் அமிழ்த்தி எடுத்து உலர்த்தவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com