

சித்தர்கள் என்றால் நமக்கெல்லாம் உடனே நினைவுக்கு வருவது பதினெண் சித்தர்கள்தான். இந்தப் புகழ்பெற்ற 18 சித்தர்களைத் தவிர இன்னும் பெருமளவில் சித்தர் பெருமக்கள் தோன்றி வாழ்ந்து மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைப் புரிந்து சமாதி ஆகியிருக்கின்றனர். சித்தர்கள் நமது நாட்டில் மட்டுமின்றி உலகின் எந்த மூலையிலும் தோன்றக் கூடும். இதை மெய்ப்பிக்கிறார் குட்லாடம்பட்டி ரமணகிரி சுவாமிகள்.
ரமணகிரி சுவாமிகள் என்று இன்று அறியப்படும் இந்தச் சித்தரின் இயற்பெயர் அலெக்ஸôண்டர் வெஸ்டிலின் என்பதாகும். பிறந்தது ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள ஸ்வீடன் நாட்டின் அரசக் குடும்பத்தில். 1921-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பிறந்த இவர் ஐந்து வயதுச் சிறுவனாய் இருந்தபோது 14 மாடிக் கட்டடத்திலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டார். ஆனால் மேலிருந்து தரையை நோக்கி விழுந்து கொண்டிருந்தவனை எங்கிருந்தோ ஒரு பறவை விர்ரென்று பறந்து வந்து தன் முதுகில் தாங்கித் தரையில் இறக்கியதாம்! அந்தப் பறவை அதுவரை ஐரோப்பாக் கண்டத்தில் எவரும் பார்த்திராத பறவையாம்!
அந்த விநோதப் பறவை தன்னைக் காப்பாற்றிய நிகழ்ச்சி சிறுவன் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அதனால் அந்தப் பறவையை மீண்டும் ஒருமுறை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தோன்றியது. சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே ஆன்மிகத்தில் பெரும் நாட்டம். பல இடங்களில் கல்வி பயின்று இந்தியாவுக்கு வந்து நம் ஜனாதிபதியாய் இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனிடம்கூடப் பாடம் பயின்றிருக்கிறான்!
பின்பு இமயமலைப்பக்கம் சென்று சிறிது காலம் திரிந்துவிட்டு தெற்கே திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அவர் திருவண்ணாமலை ஊரினுள் நுழைந்ததுமே அவர் பார்வையில் பட்டது அவர் வெகுநாளாய்ப் பார்க்க விரும்பிய அந்தப் பறவை! அதுதான் மயில்!
இவரைப் பார்த்துவிட்டு அந்த மயில் ஒரு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தது. இவரும் அதைப் பின்தொடர்ந்தார். அந்த மயில் நேராய் ரமண மகரிஷியிடம் போய்ச் சேர்ந்தது! இவரும் அங்கு சென்று ரமணரைச் சந்தித்திருக்கிறார். ரமணரிடம் மவுனதீட்சை பெற்று ரமணகிரி சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்!
("சித்தரைத் தேடி..' என்ற நூலில் கயிலை புலவர் சீ.சந்திரசேகரன்).
தஞ்சையில் உள்ள தனியார் நூலகங்களில் மிகப்பெரியது எது என்று கேட்டால் டி.என்.ஆர். (சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன்) வீட்டிலுள்ள நூலகம்தான் என்று தயங்காமல் கூறிவிடலாம். சிறு துளி பெருவெள்ளமாவதைப் போன்று சிறுகச் சிறுகச் சேர்த்த நூல்களின் எண்ணிக்கை 40,000ஐ நெருங்கிவிட்டது. (இது பத்தாண்டுகளுக்கு முன்பு!) நூலகம் வீட்டில் இருக்கிறதா அல்லது நூலகத்திற்குள் வீடு இருக்கிறதா என்று இனம் காண இயலாத அளவுக்கு வாசல் முதல் வழியெல்லாம் நூலக நிலைப் பேழைகள். வீட்டில் இடம் போதாதால் மாடிப் பகுதியைக் கட்டி முழுவதுமாக அதனை நூலகத்திற்குப் பயன்படுத்தினார். ஆனாலும் இடம் போதவில்லை. மீண்டும் பழைய கதைதான்.
தஞ்சை செல்வம் நகரில் வடக்குத் தெரு ந - ஞ எண்ணுள்ள வீட்டை நெருங்கும்போதே ஊஞ்சல் ஆடும் ஓசை கேட்கும். வீட்டருகில் சென்றால் சிவந்த மேனியுடன் திருநீறு நெற்றி முழுவதும் அலங்கரிக்க கழுத்தில் உருத்திராட்சம் அணிந்து டி.என்.ஆர். ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருப்பது தெரியும். வாய் நிறைய வெற்றிலை பாக்கு குதம்பும். இவர் பனியன் அணிந்திருப்பதே வித்தியாசமாக இருக்கும். பனியனின் தையல் இணைப்புகள் உடலை உறுத்தாமல் இருக்க பனியனைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பார்! பனியனின் லேபிள் வெளியே தெரியும். எதிரில் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் இப்படி யாராவது உட்கார்ந்துகொண்டே இருப்பார்கள். இவரிடமிருந்து கருத்துக்கள் கொட்டிக்கொண்டே இருக்கும். ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்டுஸ்மித், டென்னிசன், ஷெல்லி, கீட்ஸ், பைரன் என்று மேல் நாட்டுக் கவிஞர்கள் இவர் வாக்கில் வருவார்கள். கம்பர், வள்ளுவர், இளங்கோ, பாரதியார், திருலோக சீதாராம், ஆறுமுக நாவலர், உ.வே.சா என்று தமிழ்க் கவிஞர்களும் இவரிடமிருந்து வெளிப்படுவார்கள். நேரம் போவது தெரியாது. குளியல், பூஜை, சாப்பாடு எல்லாமே தள்ளிப் போகும். வந்தவர்களுக்கு காபியை வழங்கி விட்டு இந்த அறிவு மழை எப்போது ஓயும் என்று இவரது துணைவியார் கல்யாணி அம்மையார் காத்துக் கொண்டிருப்பார்!
டி.என்.ஆரின் நினைவாற்றல் வியக்கத்தக்கது. தாம் படித்த நூல்களின் பகுதிகளை அப்படியே ஒப்புவிப்பார். அதன் ஒத்த பகுதிகளைப் பிற நூல்களில் உள்ளவாறு மேற்கோள் காட்டுவார். இவர் நாள்தோறும் படிக்கும் நூல் அகராதிதான்! (ஜான்சனின் அகராதியின் மறுபதிப்பு இவரிடம் உள்ளது) இவர் பாரதியின் குயில் பாட்டை மொழிபெயர்த்தபோது இவரது அகராதி அறிவு மிகவும் பயன்பட்டது. ஏற்ற நீர்ப் பாட்டு என்ற தொடரில் ஏற்றம் என்ற சொல்லைத் தெளிவுபடுத்த பலர் பலவாறாகச் சுற்றி வளைத்துக் கூற முயன்றபோது இவர் 'நஏஅஈஞஞஊ' என்ற ஆங்கிலச் சொல்லைப் படங்களுடன் வந்த அகராதி ஒன்றைப் பயின்றிருந்த காரணத்தால் எளிதாக மொழி பெயர்த்ததாகக் கூறியுள்ளார்.
அகராதியில் உள்ள வித்தியாசமான சொற்களை இவர் குறித்து வைத்திருப்பார். ஆரஞ்சுச் சுளைக்கும் பலாச்சுளைக்கும் ஆங்கிலப் பதங்கள் வேறானவை என்று எடுத்துரைப்பார். பலாச்சுளைக்கு "க்ழ்ன்ல்ங்ப்' என்றும் ஆரஞ்சுச் சுளைக்கு ஷப்ண்ற்ட்' என்றும் ஆங்கிலச் சொற்கள் உள்ளமையை எடுத்துக் கூறுவார். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள அகராதியைப் படிப்பது ஒன்றே எளிய வழி என்று கூறுவார்.
நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 'Prayer' என்றால் இறைவழிபாடு என்று மட்டுமே பொருளன்று. கடவுளை வழிபடுபவர் 'Prayer', கடவுள் 'Prayee' என்றார்! இவ்வாறு ஆங்கில அகராதிக்கே டி.என்.ஆர். புதிய சொற்களை உருவாக்கிக் கொடுப்பது உண்டு!
("சேக்கிழார் அடிப்பொடி' என்ற நூலில் அதன் ஆசிரியர் இரா.சுப்பராயுலு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.