ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தக் கசிவு குணமாக...

வயோதிகத்தில் மூளைச்சுருக்கம் எனும் ஓர் உபாதை தற்சமயம் அதிகம் காணப்படுகிறது. நினைவாற்றல் இழப்பு, சகிப்புத்தன்மை குறைவு, தூக்கமின்மை போன்ற உபாதைகளுக்கு வித்திடும் இந்த மூளைச்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தக் கசிவு குணமாக...
Updated on
2 min read

என் வயது 84. BP, Sugar இல்லை. எடை 54 கிலோ. நுரையீரலில் சளி இருப்பதால் மருந்துகளைத் தினமும் டன்ச்ச் செய்கிறேன். கடந்த ஒரு வருடமாக என் வலது மூக்கில் இரத்தம் வருகிறது. 10 சொட்டு வரும், நின்றுவிடும். எந்த நேரம், எந்த நிலையில் வருகிறது என்று சொல்ல முடியவில்லை. GkR இதனால் பயமில்லை என்கிறார்கள். 15 வருடம் முன்பு ஆஹ்ங் ல்ஹள்ள் செய்து அதற்காக Capsule ஒன்று சாப்பிடுகிறேன். இது எதனால்? இதற்கு விமோசனம் உண்டா?

அ.நாராயணன், நாராயணவலசு, ஈரோடு.

வயோதிகத்தில் மூளைச்சுருக்கம் எனும் ஓர் உபாதை தற்சமயம் அதிகம் காணப்படுகிறது. நினைவாற்றல் இழப்பு, சகிப்புத்தன்மை குறைவு, தூக்கமின்மை போன்ற உபாதைகளுக்கு வித்திடும் இந்த மூளைச்சுருக்கம், அப்பகுதியிலுள்ள இரத்தக்குழாய்களின் இரப்பர் போன்ற தன்மையை இழப்பதாலும், உட்புறக் குழாய்களின் விட்டங்களில் ஏற்படும் வாயுவின் வறட்சியும், இரத்தக்கசிவிற்குக் காரணமாகலாம். தலையைச் சார்ந்த தர்ப்பகம் எனும் கபம் வயோதிகத்தில் ஏற்படுத்தும் வாயுவின் வறட்சியால் வறண்டு போவதால் இது போன்றதொரு நிலை தங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். மேலும், உணவில் ஒரு நிதானமில்லாமல் அதிகமான அளவில் காரம், புளி, உப்பு, எண்ணெய்ப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், புலால் வகை உணவுகள் ஆகியவற்றை சேர்ப்பதன் மூலமாக இரத்தக் குழாயின் உட்புறங்களில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலமாகவும் கசிவுகள் ஏற்படலாம். இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை இரத்தக் கசிவை நிறுத்தக் கூடிய சுவைகள். அதற்குக் காரணம் அதிலுள்ள நிலம், நீர் மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் பூதாதிக்கங்களே. இதிலிருந்து நாம் ஊகித்தறிய வேண்டிய விஷயம் என்னவென்றால், நெருப்பு மற்றும் ஆகாயத்தின் ஆதிக்கம் கொண்ட வஸ்துக்கள் அனைத்தும் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடியவை. இரத்தத்தை உறையச் செய்ய வேண்டியதும் அந்த கசிவு ஏற்படக்கூடிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரி செய்யக் கூடியவகையில் ஒரு மருந்து இருக்குமேயானால் அது தங்களுக்கு நல்லதொரு பயனைத் தரலாம்.

அந்த வகையில் ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய ஆடாதொடை தங்களுக்குப் பயன் தரக்கூடும். ஆடாதொடை இலையை ஆவியில் வாட்டிய பின்னர், அதைச் சாறு பிழிந்து ஒரு டீ ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால், நுரையீரல் சளி, சளியில் ரத்தம் கலந்து வருவது உடனே நிற்கும். அத்துடன் 10 சொட்டு தூதுவளை இலைச் சாற்றைப் பிழிந்து குடித்தால், சவ்வு போன்று இழுக்கும் இருமல் நீங்கும். 10 எண்ணிக்கை கொண்ட ஆடாதொடை இலைகளை எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால்

லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து இரண்டு வேளை தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் குடித்து வந்தால், எலும்புருக்கி காசநோய் (டி.பி), ரத்த கசிவு உபாதை, சளி, காய்ச்சல், சீதள வலி, விலா வலி ஆகியவை குணமடையும். ஆடாதொடையின் வேருடன் கண்டங்கத்தரியின் வேரையும் சம அளவில் எடுத்து, இடித்து பொடியாக்கி, 5 கிராம் அளவில் எடுத்து 10 மில்லிலிட்டர் தேனில் குழைத்து இருவேளை தொடர்ந்து உட்கொண்டால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் சளி மற்றும் இரத்தக்கசிவு உபாதை குணமாக வாய்ப்பிருக்கிறது. இதற்குள்ள மற்ற மருத்துவ குணங்கள் - நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளி காய்ச்சல், எலும்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை நீங்கும். ஆடாதொடையின் இலையையும் புதினா இலைகளையும் 1 கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மி.லி.யாக சுண்ட காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடிக்கலாம். அப்படிச் செய்தால் இரத்தக்கசிவு குணமாவதுடன் கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊரல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி போன்றவையும் குணமாகும். உலர்ந்த ஆடாதொடை இலையைப் பொடி செய்து, இலந்தை இலையையும் உலர்த்திப் பொடித்துக் கலந்து சுமார் 5 கிராம் வீதமெடுத்து சூடாறிய பாலுடன் கலந்து 5 சொட்டு தேனும் விட்டுச் சாப்பிட இரத்தக்கசிவைக் குணப்படுத்தும். மாதுளம் பழச் சாறு அருகம்புல் சாறு சமஅளவு 30 மி.லி. மூன்று வேளை சாப்பிட்டாலும் இரத்தக் கசிவு குணமாகும்.

ஆயுர்வேத மருந்துகளாகிய வாஸாகுடூச்யாதி, குடூச்யாதி கஷாயம் போன்றவை தங்களுக்குப் பயன் தரலாம். இதற்கு மருத்துவருடைய ஆலோசனை தேவை.

(தொடரும்)

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com