தகவல்கள்...

பிரிஜ்ஜில் வாடை வராதிருக்க எலுமிச்சைச்சாறு பிழிந்த தோலை ஒரு கப்பில் போட்டு வைக்க வேண்டும்.
தகவல்கள்...

பிரிஜ்... பிரிஜ்... பிரிஜ்

  பிரிஜ்ஜில் வாடை வராதிருக்க எலுமிச்சைச்சாறு பிழிந்த தோலை ஒரு கப்பில் போட்டு வைக்க வேண்டும்.

  கொத்தமல்லிக் கீரையை வாழையிலையில் சுற்றி பிரிஜ்ஜில் வைத்திருந்தால் ஒரு வாரம் வாடாது.

  கத்தரிக்காயை எப்போதும் காகிதப்பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியான பிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

  பிரீசரில் ஐஸ் தட்டின் அடியில் சிறிதளவு எண்ணெய்யைத் தடவி பின்னர் வைத்தால் ஒட்டிக் கொள்ளாமல் எளிதில் எடுக்க முடியும்.

-ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

சபாஷ் சாகிப்!

திருப்பூரைச் சேர்ந்த குலாம் காதர் சாகிப் என்பவர் 1929-இல் பேசும்பட இயந்திரத்தை வாங்குவதற்காக கொல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு ஓர் இயந்திரம் மூலமாக துணி தயாரிப்பதைப் பார்த்து வியந்தார். அந்தத் துணிக்குப் பெயர் "பனியன்' என்றனர் தயாரிப்பாளர்கள். பேசும் பட மிஷின் வாங்குவதை விட்டுவிட்டு பனியன் துணி தயாரிக்கும் மிஷினை வாங்கிக் கொண்டு திருப்பூருக்கு வந்தார் குலாம் காதர் சாகிப்.

 தன் சகோதரர் சத்தார் சாகிப்பை பார்ட்னராகச் சேர்த்துக் கொண்டு "பேபி நிட்டிங்' கம்பெனியைத் தொடங்கினார். வண்டிச் சக்கரம் போலிருந்த அந்த மிஷினைக் கையால் சுற்றிச் சுற்றி துணியைத் தயாரித்தனர். ஆனால் பொதுமக்கள் துணியை வாங்க அஞ்சினர். "துணி வாங்கினால் ஒரு பீடிக்கட்டு இனாம்' என்று அறிவித்தார்கள். இப்படிதான் திருப்பூர் பனியன் தொழில் விருத்தியடைந்தது. இன்று 15 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது திருப்பூர் பனியன் தொழில்!

 இரா. கல்யாண சுந்தரம், மதுரை.

சாதித்துக் காட்டிய ஜாம்ஷெட் ஜீ!

குஜராத்தைச் சேர்ந்த ஜாம்ஷெட்ஜீ சொந்த வேலை விஷயமாக பம்பாய்க்குச் சென்றார். அன்று பம்பாயின் பிரபலமான வாட்சன் ஓட்டலுக்குச் சென்று தங்குவதற்கு அறை வேண்டுமென்றார். இது ஆங்கிலேயர்கள் மட்டுமே தங்கலாம்; இந்தியருக்கு இங்கே இடமில்லை என்றனர் நிர்வாகத்தினர். கோபமடைந்த ஜாம்ஷெட்ஜீ "" இந்த இடத்திலேயே இந்த ஓட்டலை விட பெரிய ஓட்டலை என்னால் கட்ட முடியும்'' என்றார். அங்குள்ள ஆங்கிலேயர்கள் கேலியாகச் சிரித்தனர்.

சொன்னது போலவே வாட்சனுக்கு அருகிலேயே இடத்தை வாங்கி பிரம்மாண்டமான ஓட்டலைக் கட்டத் தொடங்கினார். நாலே கால் கோடி ரூபாயில் 1903-இல் ஓட்டலைக் கட்டி முடித்தார். அந்த ஓட்டலின் பெயர் தாஜ்மகால் பேலஸ்!

இரா. கல்யாண சுந்தரம், மதுரை.

கடைச் சங்கம்!

பாரதியார் திருநெல்வேலியில் இருந்தபோது அங்கே முத்தையா பிள்ளை என்பவருடைய கடையில் அன்பர்கள் கூடுவார்கள். கீட்ஸ், ஷெல்லி, பைரன் ஆகியோரின் கவிதைகளின் மேன்மையைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பர். இரவு இரண்டு மணி வரை பேச்சு தொடரும். ""இப்படிக் கடையிலே கூடி எத்தனை மணி நேரம் பேசுவது?'' என்று அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு பாரதியார், ""பாண்டியா! இது கடையல்ல! கடைச் சங்கமப்பா! என்றார்.

நெ. இராமன், சென்னை.

செல்போனின் எடை!

இப்போதுள்ள செல்போன்களில் எக்கசக்கமான பயன்பாடுகள் உள்ளன. கையில் கட்டும் கடிகாரத்திலும் செல்போன்கள் சகல வசதிகளுடன் வந்துவிட்டது. ஆனால், செல்போன் அறிமுகமான காலத்தில் அது செங்கல் அளவுக்குப் பெரியதாகவும், ஒன்றரைக் கிலோ எடையுடனும் இருந்தது. விலை 3996 டாலர்கள் அதை வாங்கவும் மக்கள் வரிசையில் நின்றனர். 1972 - இல் ரேடிக்ரோ லோப் மார்ட்டின் கூப்பர் என்ற இருவர் சேர்ந்து கையடக்கமான செல்போனை உருவாக்கினர். இருவரும் விஞ்ஞானிகள். எனினும் செல்போன் டவர்களை உருவாக்க பத்து ஆண்டுகள் ஆய்வு செய்தபடி 10 கோடி டாலர்களைச் செலவு செய்தனர். 1983-இல் தற்போதுள்ள மிகச் சிறிய செல்போன்கள் உருவாகின.

இரா.கல்யாண சுந்தரம், மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com