

பாரதியார் தனது பாடல்களை, தேவார இசைப் பாடகரான சுந்தர ஓதுவாமூர்த்தியிடம் கொடுத்து இசையோடு பாடச் சொல்லிக் கேட்பதுண்டு.
தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்து, பாரதியார் பாடல் இயற்ற... அந்தப் பாடலுக்கு சுந்தர ஓதுவா மூர்த்திகள் இசையமைத்து பாடுவது வழக்கம்.
ஒருநாள் சுந்தர ஓதுவா மூர்த்தி பாடி முடித்ததும் "சரே'லென்று எழுந்த பாரதியார், ஆற்றுக்குள் இறங்கி ஓடும் நீரைத் தொட்டுத் திரும்பினார்.
இதைக் கண்ட சுந்தர ஓதுவாமூர்த்திக்கு வியப்பு! அவர் ""திடீரென ஓடிச் சென்று, ஆற்று நீரைத் தொட்டுவிட்டு வருகிறீர்களே... ஏன்?'' என்று பாரதியாரிடம் கேட்டார்.
உடனே, ""நண்பரே! உமது பாடலைக் கேட்டு மெய் மறந்த நான் செயலிழந்து போனேன். இந்த தாமிரபரணி நதியும் என்னைப் போன்றே செயலிழந்து போயிருக்குமோ என்று சந்தேகம். எனவேதான் ஓடிச்சென்று ஆற்றின் ஓட்டத்தைச் சோதித்துத் திரும்பினேன்!'' என்று கூறினாராம் பாரதியார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.