திரைக் கதிர்

குட்டிப்புலி, கொம்பன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் படம் மருது.
திரைக் கதிர்
Updated on
2 min read

குட்டிப்புலி, கொம்பன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் படம் மருது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். வைரமுத்து, யுகபாரதி ஆகியோரது பாடல்களுக்கு டி.இமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 20-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கு ராயுடு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் பெரும் வசூலைக் குவித்த படமாக திகழ்கிறது விஜய்யின் தெறி. கடந்த ஐந்து மாதங்களில் வெளியான படங்களிலேயே தெறியின் வெற்றி குறிப்பிடத் தகுந்த வெற்றியாக கருதப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களையும் தாண்டி இச்சாதனையைப் புரிந்துள்ளது. எந்தப் படமும் போட்டிக்கு இல்லாமல் தனியாக களம் கண்டதால் இந்த வெற்றியும், வசூலும் சாத்தியம் என்கிறது கோலிவுட் வட்டாரம். படம் வெளியான 25 நாள்களில் ரூ. 65 கோடி என்பது இப்படத்தின் சாதனையாக கருதப்படுகிறது. அதில் விநியோகஸ்தர்களின் பங்காக ரூ.55 கோடி கிடைத்துள்ளது. தெறி படம் திரையிடப்பட்ட மூன்றில் இரண்டு மடங்கு திரையரங்குகளில் தொடர்ந்து 40 சதவீதமான பார்வையாளர்களோடு படம் இன்னமும் ஓடிக் கொண்டிருப்பது சமீப ஆண்டுகளில் எந்தப் படத்துக்கும் இல்லாத வரவேற்பு.

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ஏற்கெனவே சென்னை அம்பத்தூரில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு கோயில் கட்டி உள்ளார். அந்த கோயிலுக்கு எதிரிலேயே அவரது தாய் கண்மணிக்கு கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார். அதன் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. இந்த கோயில் இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்பட உள்ளது. கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கோயிலின் புகைப்படத்தையும் ராஜஸ்தானில் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தனது தாயாரின் சிலையின் புகைப்படத்தையும் கடந்த அன்னையர் தினத்தன்று வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான இணைப்பை உறுதிப்படுத்துவதில் சமூக வலை தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கமல், ரஜினி, சூர்யா, தமன்னா, சமந்தா என்று தமிழ் நடிகைகள் அனைவருமே இணையத்தில் இணைந்து தங்களது கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர். 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், ஃபேஸ்புக்கில் மட்டும் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்தவர், இப்போது டிவிட்டரிலும் இணைகிறார். இனி ரசிகர்கள் காஜலை அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பின் தொடரலாம். இவரின் முதல் ட்விட்டே ரொம்ப ஸ்பெஷல். தெலுங்கு ஸ்டாரான மகேஷ்பாபுவுடன் இவர் நடிக்கும் பிரமோற்சவம் படத்திற்கான ப்ராண்ட் நியூ போஸ்டரை முதல் ட்விட்டாக பதிவிட்டுள்ளார். ஜீவா, தமன்னா, ரகுல்ப்ரீத்சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ட்விட்டருக்கு வந்த காஜலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் இறைவி. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் கடந்த மாதம் இப்படம் திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அதிலும் மாற்றம். படத்தின் ரிலீûஸ இன்னும் இரண்டு வாரங்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள். வரும் ஜூன் 3-ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இறைவி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. இறைவி வெளியாகவிருக்கும் ஜூன் 3 ஆம் தேதி ஜி.வி.பிரகாஷின் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வெளியாகவுள்ளது. ரஜினியின் கபாலி படமும் இதே நாளில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com