

நெதர்லாந்து நாட்டின் தெற்கு ஹாலந்தின் லிசி (Lisse) பகுதியில் உள்ள கெயூகென்ஃகாப் என்ற இடத்தில் உலகின் மிகப்பெரிய பூந்தோட்டம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் - மே மாதத்தில் நடக்கும் மலர்க் கண்காட்சி உலகப் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் இந்த தோட்டத்தில் 7 மில்லியன் பூக்கள் மலர்கின்றன. இவற்றில் துலிப் பூவும் அடக்கம்.
உலகிலேயே மிக அதிக பூ ஏற்றுமதி செய்யும் நாடு நெதர்லாந்துதான்.
"கெயூகென்ஃகாப்' என்றால் சமையலறைத் தோட்டம் எனப் பெயர். அதுதான் பிறகு பூந்தோட்டமாக மாறியது.
அதற்காக மிகமிக நீண்ட துலிப் தோட்டங்களை இந்த தோட்டத்தில் காண இயலாது.
அவை தோட்டத்திற்கு வெளியே தனியாரால் வளர்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.