இது எப்படி இருக்கு?
இந்த கால குழந்தைகள், பெற்றோரை விட எவ்வளவு ஸ்மார்ட்டாக செயல்பட்டு சமாளிக்கிறார்கள் என்பதை கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தன்னுடைய பெண்.. சானா மூலம்தான் பெற்ற இரு அனுபவங்களை, மும்பையில் சமீபத்தில், ஒரு


இந்த கால குழந்தைகள், பெற்றோரை விட எவ்வளவு ஸ்மார்ட்டாக செயல்பட்டு சமாளிக்கிறார்கள் என்பதை கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தன்னுடைய பெண்.. சானா மூலம்தான் பெற்ற இரு அனுபவங்களை, மும்பையில் சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது பகிர்ந்து கொண்டார்.
முதல்நாள் இரவு கிரிக்கெட் போட்டியில் விளையாடி களைத்திருந்தேன். இந்த நிலையில் அடுத்த நாள், பள்ளியில் நடந்த ஓபன் ஹவுஸ்ஸில், நான் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும் என அழைத்தாள் சானா.
நானும் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
""என்னை எதற்கு அழைத்தாய்?'' என சானாவிடம் கேட்டேன்.
""முடிந்த "டேர்ம் எக்சாமில் குறைந்த மார்க்குகள் எடுத்திருந்தேன். என்னை தனியாக, பிரின்ஸ்பால் திட்டுவார். அதிலிருந்து தப்பதான் உங்களை அழைத்தேன்' ' என்றாள். எப்படி இருக்கு?
மற்றொரு தடவை பெங்காலி பாட ஆசிரியை, சானாவின் தாயாரை அழைத்திருந்தார். ஆனால் சானா என்னை அழைத்துச் சென்றாள். அந்த பெங்காலி பாட ஆசிரியை கிரிக்கெட் விசிறி. அதனால் என்னை பார்த்ததும் சிரித்துப் பேசியே அனுப்பிவிட்டார். இதற்கும் காரணம் கேட்டேன்.
பெங்கால் மொழி பாடத்தில் ரொம்ப குறைந்த மார்க் வாங்கியிருந்தேன், ""அம்மாவுடன் சென்றால் என்னை குறை கூறுவார். நீங்கள் வந்ததால் அதனை மறந்து, கிரிக்கெட் பற்றி பேசியே அனுப்பிவிட்டார்'' என்றாள் சானா?
இப்போது தெரிகிறதா... இந்த காலகுழந்தைகளின் சாமர்த்தியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...