ஊக்குவிப்பது...  கைப்பந்தாட்டத்தை!

சர்வதேச  இறகுப் பந்தாட்டத்தில்  இரண்டாம்   இடத்தில்  இருக்கும் பி. வி. சிந்து கைப்பந்தாட்டத்திற்கு விளம்பரத் தூதுவராக மாறியுள்ளார்.
ஊக்குவிப்பது...  கைப்பந்தாட்டத்தை!
Updated on
1 min read

சர்வதேச  இறகுப் பந்தாட்டத்தில்  இரண்டாம்   இடத்தில்  இருக்கும் பி. வி. சிந்து கைப்பந்தாட்டத்திற்கு விளம்பரத் தூதுவராக மாறியுள்ளார். இந்தக் கைப்பந்தாட்டப்   போட்டிகள் 2019  பிப்ரவரி மாதம்  இந்தியாவில் தொடங்க உள்ளன. சிந்துவுடன் விளம்பரத் தூதுவராக இணைந்திருப்பவர்  பிரபல கைப்பந்தாட்ட வீரரான டேவிட் லீ. இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். 

இறகுப்   பந்தாட்ட வீராங்கனை  சிந்து   கைப்பந்தாட்டத்திற்காக  விளம்பரத்தில் இறங்கியது ஏன்..?  சிந்துவே சொல்கிறார். 

""அப்பா அம்மாவுக்கு பிடித்த விளையாட்டு  கைப் பந்தாட்டம். அவர்கள்  கைப் பந்தாட்டம் விளையாடியதைப் பார்த்து வளர்ந்தவள் நான். அப்பா  ஆசியப் போட்டியில் பதக்கம் பெற்றவர். இந்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றவர். அப்பா  விளையாடும் போது என்னையும் அழைத்துச் செல்வார்.  அதனால் கைப் பந்தாட்ட  விதி முறைகள், விளையாடும் லாவகம் குறித்து  எனக்குத் தெரியும். அப்பா,  அம்மா  விளையாடுவதைக் கண்டுதான்  நான் இறகுப் பந்தாட்டம் பக்கம் வந்தேன்.  கைப் பந்தாட்டத்திற்கும், இறகுப் பந்தாட்டத்திற்கும்  பல ஒற்றுமைகள் இருக்கின்றன.  மேலே  குதித்து எழுந்து   அதிரடியாகப்  பந்தை எதிர்ப் பக்கம் நோக்கி அடிப்பது இரண்டு விளையாட்டுகளிலும் உண்டு.  கைப் பந்தாட்டத்தில்  கை கொண்டு  பந்தை அடிப்போம்.  இறகுப் பந்தாட்டத்தில் ராக்கெட்டைக்  கையில் பிடித்து  ஆட வேண்டும்.

மற்றபடி குனிவது நிமிர்வது, பக்கவாட்டில் சரிந்து   பந்தை ஓடி  அடிப்பது போன்ற அம்சங்கள் இரண்டு விளையாட்டுகளிலும் உள்ளன. 

இந்தியாவில்  விளையாட்டுத்  துறை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி  புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.  எல்லா வகை விளையாட்டுகளிலும் இடம் பெற  ஆர்வமுடன்  இளைய தலைமுறை  வருகிறது. இது கைப் பந்தாட்டத்திற்கும் பொருந்தும். அப்பா காலத்து  கைப் பந்தாட்ட நிலைமை அல்ல  இப்போது... இந்த மாற்றங்களால்  பல மாநில வீரர்கள்  ஒன்றாக விளையாடும்  சந்தர்ப்பம் உண்டாகும்... புரிதலும் உண்டாகும்.  தேசிய ஒற்றுமைக்கும்  இது  ஒரு  தளமாக    அமையும்'' என்கிறார் சிந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com