எதிலும் நிதானம் வேண்டும்!

என் வயது 46. வலது கையில் நடுவிலுள்ள முழங்கை மூட்டுப்பகுதியில்  TENNIS ELBOW எனும் உபாதையால் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறேன். இதை எப்படி குணப்படுத்துவது?
எதிலும் நிதானம் வேண்டும்!

என் வயது 46. வலது கையில் நடுவிலுள்ள முழங்கை மூட்டுப்பகுதியில்  TENNIS ELBOW எனும் உபாதையால் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறேன். இதை எப்படி குணப்படுத்துவது?

-சக்ரவர்த்தி, சென்னை.

வலது கையை தன் சக்திக்கு மீறி பயன்படுத்துவதனாலும், கனமான பொருட்களை எடுக்க நேர்வதாலும், வலது புறம் சரிந்து படுத்து வலது கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்து உறங்குவதாலும், அதிக உடற்பயிற்சியினாலும், பூட்டுகளைச் சுற்றி அமைந்துள்ள தசை நார்கள், வாயுவின் வறட்சியால்  வலுவிழப்பதாலும், நீங்கள் குறிப்பிடும் உபாதை தோன்ற வாய்ப்பிருக்கிறது. இந்த மூட்டுப் பகுதி ஒரு மர்மஸ்தானமாக இருப்பதால், அதை குணப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கை குலுக்கும் போதும், துணிகளையோ  மற்ற பொருட்களையோ பிழியும் போதோ வலி அதிகமாகும். வலி, வீக்கம், தொடமுடியாமை போன்ற அவஸ்தைகளை ஏற்படுத்தும்.

சிறிய அசைவினாலும் அதிக வலி ஏற்படும் இப்பகுதியை ஓய்வு எடுக்கும் வகையில், அவ்விடத்தைச் சுற்றித் துணியால் கட்டி வைத்திருப்பதன் மூலம், வலி குறையக் கூடும். மர்ம குளிகை எனும் ஆயுர்வேத மாத்திரையை முருங்கை இலைச் சாறுவிட்டு இழைத்துத் தளர்த்தி, வலி உள்ள பூட்டுப்பகுதியில் போட்டு அரை, முக்கால் மணிநேரம் ஊற வைப்பதும், கள்ளி, எருக்கு, துளசி, சித்தாமுட்டி, வில்வம், முருங்கை, நொச்சி, மூக்கிரட்டை, ஆமணக்கு, சீந்தில்கொடி போன்றவற்றின் இலைகளை கிடைத்தமட்டில் எடுத்து தண்ணீர்விட்டு குக்கரில் வேக வைத்து, வரும் நீராவியை அவ்விடத்தில் காட்டுவதும் நன்மையளிக்கக் கூடிய சிகிச்சை முறைகளாகும். அதன் பிறகு காலையில் கொட்டஞ்சுக்காதி எனும் சூரண மருந்தை புளித் தண்ணீர்விட்டுத் தளர்த்திச் சூடாக்கி, பற்று இடுவதும் மாலையில் கறுப்பு எள்ளும், வெந்தயமும் பாலில் வேக வைத்து அரைத்து பற்று போடுவதும் வலி குறைப்பதற்கான எளிய வழிகளாகும். சுமார் பத்து நாட்களுக்கு இவ்வாறு செய்த பிறகு, முரி வெண்ணெய் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை நீராவியில் சூடாக்கி, வலி உள்ள பகுதியில் பன்னிரண்டு அங்குலம் மேலிருந்து ஊற்றுவதால், தசை நார்களை வலுப்படுத்தவும் நரம்புகளை எலும்பின் இடுக்குகளிலிருந்து விடுவிக்கக் கூடிய வகையிலும் பயன்படும்.

வீக்கத்தை வடிக்கச் செய்ய, ரத்தக் குழாய்களை விரைவாக ரத்தம் நகர, மஹாமஜ்ஸ்டாதி எனும் கஷாயம் உதவுகிறது. மந்தமான வீக்கத்துடன் கையை அசைக்கும் போது ஏற்படும் வலிகுறைய, புனர்னவாதி கஷாயம் கொடுப்பது நலம். தசை நார்கள் வலுவிழந்திருப்பதாகத் தெரிந்தால் தான்வந்திரம் கஷாயம் கொடுப்பது மரபு.

குடலில் வாயுவை சீற்றமடையச் செய்யும் சமைத்து ஆறிய நிலையில் உள்ள பருப்பு சேர்ந்த உணவுப் பொருட்களையும், கிழங்கு வகைகளையும் தவிர்க்க வேண்டும். பசியின் தன்மையறிந்து உணவுகளை வெது வெதுப்பாகச் சாப்பிடுவதும், சுக்குத் தட்டிப் போட்ட வெந்நீர் அருந்துவதும் நரம்புகளையும் தசை நார்களையும் எலும்புகளையும் பலவீனப்படுத்தாமல் பார்த்துக் கொள்வதும் சில யுக்திகளாகும்.

நடைப்பயிற்சி செய்பவர்கள் பலரும் கைகளை மேலும் கீழுமாக ஆவேசத்துடன் ஆட்டிக் கொண்டு செல்வதைப் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு வாயுவின் சீற்றம் அதிக அசைவினால் கைகளில் ஏற்பட்டு, பஉசசஐந உகஆஞர உபாதை ஏற்பட தங்களையே தயார்படுத்திக் கொள்கிறார்கள். உடற்பயிற்சி எதுவாகயிருந்தாலும், தன் சக்திக்கு உட்பட்டே செய்ய வேண்டும். மற்றவர்கள் செய்வதைப் போல, தானும் செய்ய வேண்டும் என்று முயற்சித்தால், அதன் விளைவுகள் ஆபத்தாகிவிடும். சிரிப்பு, பேச்சு, உடற்பயிற்சி போன்றவை நிதானத்துடன் செய்யப்பட வேண்டியவை, மீறினால் வாத நோய்கள் தாக்கிவிடும் என்று வாக்படர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார்.

நவரக்கிழி எனப்படும் சிகிச்சை முறை நல்ல பலனை இந்த உபாதையில் தரக்கூடியது. சித்தாமுட்டி எனும் மூலிகைச் செடியினுடைய வேரையெடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 60 கிராம் அளவில் ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு வேக வைத்து 250 மி. லிட்டராக குறுகியதும் வடிகட்டி அதில் 100 கிராம் கார அரிசி எனப்படும் நவர அரிசியை சேர்த்து 250 மி.லி. பாலும் விட்டு வேக வைத்து சாதமாக அந்த அரிசி வெந்ததும் மூட்டை கட்டி வெது வெதுப்பாக பஉசசஐந உகஆஞர உபாதை எற்பட்டுள்ள பகுதியில் உருட்டி உருட்டி சுமார் அரை மணி முதல் முக்கால் மணி வரைத் தேய்த்து விடுவதால் வீக்கம், எரிச்சல், வலி ஆகியவை நன்கு கட்டுப்படும். இந்த உபாதைக்கான ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும் இது.

கார்ப்பாஸாஸ்த்யாதி எனும் தைல மருந்தை TENNIS ELBOW பகுதியில் தாரையாக ஊற்றி அதன் மீது மூலிகை வேர்களால் நீராவி குளியல் செய்வதும் கேரள தேசத்தின் பிரசித்தி பெற்ற வைத்தியமுறையாகும். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com