கதாநாயகிக்கு முக்கியத்துவம்!

ரத்னகுமார் இயக்கத்தில் சமீபமாக வெளிவந்த படம் "ஆடை'. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து வந்த இந்தப் படத்தில் அமலாபால் நடித்திருந்தார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம்!
Updated on
1 min read

ரத்னகுமார் இயக்கத்தில் சமீபமாக வெளிவந்த படம் "ஆடை'. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து வந்த இந்தப் படத்தில் அமலாபால் நடித்திருந்தார்.  விவேக் பிரசன்னா, விஜே ரம்யா, சரித்ரன், டி.எம்.கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கடந்த ஜூலை 19-ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.  அமலாபால் நடித்த பல காட்சிகள் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த விரசமும் இல்லாமல் கதைக் களம் அமைக்கப்பட்டிருந்தது. 

அதேசமயம், சில எதிர்ப்புகளும் கிளம்பின. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்தப் படம் குறித்து நேரடியாக விவாதிக்கத் தயாரா? என இயக்குநர் ரத்னகுமாரிடம் கேள்வி எழுப்பினார். இப்போது இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கணா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com