சுடச்சுட

  
  KATHAI

  எம்.ஏ.இறுதித் தேர்வு எழுதி முடித்த ஓர் இளைஞன் ஜோசியரிடம், "நான் மகிழ்ச்சியாக இருப்பேனா என்று  பார்த்துச் சொல்லுங்கள்'' என்றான். 
  "கல்யாணம் ஆனால் மகிழ்ச்சியோடு இருப்பாய்'' என்றார்.
  "சரி... கல்யாணம் ஆகுமா என்று பார்த்துச் சொல்லுங்கள்''
  "ஒரு வேலை கிடைத்தால்
  நிச்சயம் கல்யாணம் ஆகும்'' என்றார்.
  "அப்படியானால் வேலை கிடைக்குமா என்று பாருங்களேன்'' என்று கேட்டான்.
  "தேர்வில்  பாஸானால் வேலை கிடைப்பது உறுதி'' என்றார் ஜோசியர்.
  "தேர்வில் பாஸ் ஆகுவேனா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்''
  "நன்றாகத் தேர்வு எழுதியிருந்தால் நிச்சயம் நீ பாஸ்''
  "நன்றாகத் தேர்வு எழுதியிருக்கிறேனா என்று
  பார்த்துச் சொல்லுங்கள்''  என்று கேட்டான் இளைஞன்.
  "அது எனக்கு எப்படித் தெரியும். உனக்குத் தானே தெரியும்''  என்றார் ஜோசியர். 
  ஆதினமிளகி, வீரசிகாமணி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai