டாம் ஹாங்க்ஸ்
By DIN | Published On : 18th November 2019 01:34 PM | Last Updated : 18th November 2019 01:34 PM | அ+அ அ- |

இரண்டுமுறை ஆஸ்கர் விருதுகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் பெற்றவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ். இவர் ஓர் ஆபூர்வ சேகரிப்பாளர்.
சினிமா நட்சத்திரங்கள் நகை முதல் நாய்கள் வரை அனைத்தையும் சேகரிப்பவர்கள். இவர் வித்தியாசமாக, டைப்ரைட்டர்களைக் சேகரிக்கிறார். இது வரை100-க்கும் அதிகமான டைப்ரைட்டர்களை சேகரித்துள்ளார். இவற்றை ஆய்வு செய்து, ஒரு செயலியையும் உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல; டைப்ரைட்டர்களை மையமாக வைத்து 17 சிறுகதைகளை எழுதியுள்ளார்.
அமெரிக்க அரசு இவருக்கு PRESIDENT MEDAL OF FREEDOM விருது கொடுத்து கௌரவித்துள்ளது.
- ராஜிராதா, பெங்களூரு.